அடிலெய்ட்: இந்திய அணியில் ஒன்றிருந்தால் மற்றொன்று இல்லாமல் போய்விடுவதாக புலம்பினார் கேப்டன் டோணி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் படுதோல்வி அடைந்த பிறகு இந்திய கேப்டன் டோணி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அணியை பொறுத்தளவில், பேட்டிங் சிறப்பாக 'கிளிக்' ஆகும் போது, பந்து வீச்சாளர்கள் சொதப்புகிறார்கள். பவுலர்கள் நன்றாக செயல்படும் போது, பேட்ஸ்மேன்கள் ஏமாற்றி விடுகிறார்கள்.

இது எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. இப்பிரச்சினையை சரி செய்ய வேண்டியது அவசியம். உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டத்திற்கு முன்பாக எங்களுக்கு இன்னும் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே இருக்கிறது. அதற்குள் நாங்கள் களம் காணும் சரியான லெவன் அணியை அடையாளம் காண வேண்டும். இந்த பயிற்சி ஆட்டத்தில் இருந்து சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல் முறையாக உலக கோப்பையில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள ஆப்கானிஸ்தானுடன்தான் அடுத்த பயிற்சி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் சீரிசில் ஆரம்பித்து, இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் உள்ள இந்திய அணிக்கு, ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
உங்க மைன்ட் வாய்ச நான் கேட்ச் பண்ணிட்டேன்.. ஆப்கானிஸ்தான்கூடயாவது ஜெயிப்பாங்களான்னுதான கேட்குறீங்க?