Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்... டோணிக்கு "பொடணி"க்குப் பின்னாலும் கண் இருக்கேய்யா! #INDvNZ

ராஞ்சி: சொந்த ஊரில் வைத்து இந்திய அணி தோற்றது டோணிக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காதுதான். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் நேற்று அத்தனை ரசிகர்களையும் துள்ள வைத்து விட்டது.

Dhoni stuns Ross with his smart stumping

அதுவும் திரும்பிப் பார்க்காமல் பின்னால் கூட பந்தை வீசி ஸ்டம்பிங் செய்த அவரது லாவகம் அத்தனை பேரையும் மிரள வைத்து விட்டது. டோணிக்கு தலைக்குப் பின்னாலும் ஒரு கண் இருக்கே என்று பலரும் புளகாங்கிதம் காட்டி விட்டனர் சமூக வலைதளங்களில்.

டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சேசிங்கில் சற்று கோட்டை விட்டதால் தோல்வியைத் தழுவ நேரிட்டது. ஆனால் நியூசிலாந்து அணி பேட்டிங்கின்போது டோணி கலக்கி விட்டார்.

நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. 46வது ஓவரின்போது ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார் ராஸ் டெய்லர். ஒரு ரன் எடுத்த அவர் 2வது ரன்னுக்காக திரும்பி வந்தார். அவர் கிரீஸை நெருங்கி விட்டார். ஆனால் அதற்குள் பந்து டோணி கைக்கு வந்து சேர்ந்திருந்தது. வாங்கிய பந்தை அப்படியே திரும்பிக் கூட பார்க்காமல் ஸ்டம்ப்பை நோக்கி வீசினார் டோணி.

என்ன ஆச்சரியம் சரியாக பைல்ஸைத் தட்டிச் சென்றது பந்து. ராஸ் டெய்லர் மயிரிழையில் ரன் அவுட் ஆனார். ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். டோணியே கூட தான் ரன் அவுட் செய்ததை நம்ப முடியவில்லை.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி விட்டது. டோணி ரசிகர்கள் பார்த்துப் பார்த்து விசிலடித்து வருகின்றனர்.

Story first published: Thursday, October 27, 2016, 11:07 [IST]
Other articles published on Oct 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+