ஐபிஎல் 4: சென்னை சூபபர் கிங்ஸ் வெல்லும்-டோணி நம்பிக்கை
சென்னை: ஐபிஎல் 4-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடும் என்று அந்த அணியின் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது புதிய அணி பற்றியும் அறிவிப்பு வெளியானது.
அதன் பிறகு டோணி கூறியதாவது,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும். அணியில் ஏற்கனவே இருந்த வீரர்கள் பலர் உள்ளனர். முரளிதரன் இல்லாதது வருத்தம் தான்.
எங்கள் அணி சிறப்பாக அமைந்துள்ளது. பேப்பரில் பார்ப்பதற்கு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுகிறது என்பது தான் முக்கியம். இதைத் தான் நான் முன்பும் கூறினேன்.
வீரர்களின் உடல் நலம் வெற்றிக்கு வித்திடும். எங்கள் அணியில் பத்ரி, ரைனா, டூ பிளஸ் என்று சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். விரைவில் ஹஸ்ஸியும் வந்துவிடுவார்.
முரளிதரன் ஒரு சிறந்த வீரர். அவர் இல்லாதது வருத்தம் தான். ஐபிஎல் ஏலம் துவங்கியபோதே சில முக்கிய வீரர்கள் எங்கள் அணியில் இருந்து வெளியேறக்கூடும் என்று நினைத்தோம். இனி மறுபடியும் புதிதாகத் துவங்க வேண்டும். கடந்த மூன்று வருடங்கள் வித்தியாசமாக இருந்தது என்றார்.
நாளை சென்னையில் துவங்கும் ஐபிஎல் 4-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications