Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி - ரெய்னா இடையே விரிசல்.. ரூமுக்காக நடந்த சண்டை.. மூடி மறைக்கப்பட்ட சிஎஸ்கே ரகசியம்.. பரபர தகவல்

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தினம் ஒரு அதிர்ச்சி தகவல் வந்து கொண்டே இருக்கிறது.

Recommended Video

பயத்தில் இருந்த CSK.. Suresh Raina விலகலுக்கு இதான் காரணமா?

கடந்த வெள்ளி அன்று சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. சனிக்கிழமை அன்று சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகினார்.

அவர் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்தது.

சுரேஷ் ரெய்னா ஆகஸ்ட் 15 முதல் 20 வரை சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்றார். தோனி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த போது தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அடைய வைத்தார். தோனி சென்ற பாதையில் தானும் செல்வதாக அறிவித்தார்.

துபாய் சென்றார்

துபாய் சென்றார்

அதன் பின் அணியுடன் கிளம்பி துபாய் வந்தார். ஒரு வாரம் குவாரன்டைனில் இருந்தது சிஎஸ்கே அணி. அப்போது சிஎஸ்கே அணி வீரர்கள் இருவர் மற்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.

உறவினர் வீட்டில் தாக்குதல்

உறவினர் வீட்டில் தாக்குதல்

மறுநாள் சுரேஷ் ரெய்னா இந்தியா கிளம்பி சென்று விட்டதாகவும், இந்த ஐபிஎல் சீசனில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. முதலில் அவரது உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த தாக்குதல் மற்றும் அதனால் ஒருவர் பலியானதை அடுத்தே ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்பட்டது.

உண்மையின் ஒரு பாதி

உண்மையின் ஒரு பாதி

பின் சுரேஷ் ரெய்னா அணிக்குள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் பயத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. இது எல்லாமே உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது போல மற்றொரு அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ரெய்னா - தோனி இடையே பிளவு

ரெய்னா - தோனி இடையே பிளவு

சுரேஷ் ரெய்னா - தோனி இடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு காரணம் ஹோட்டல் அறை தான் எனவும் தெரிய வந்துள்ளது. துபாய் சென்ற உடன் சிஎஸ்கே வீரர்களுக்கு குவாரன்டைனில் இருக்க தனித்தனி அறைகள் கொடுக்கப்பட்டது.

பால்கனி இல்லை

பால்கனி இல்லை

அந்த அறைகளை விட்டு அவர்கள் வெளியே வர அனுமதி இல்லை. இந்த நிலையில், ரெய்னா தனக்கு வழங்கப்பட்ட அறை சரியில்லை, அதில் பால்கனி இல்லை என புகார் கூறி உள்ளார். தோனிக்கு அளித்தது போல பால்கனி வைத்த அறை வழங்குமாறு கேட்டுள்ளார்.

தோனி பேசியும்..

தோனி பேசியும்..

ஆனால், குவாரன்டைனில் இருந்ததால் அறையை மாற்றுவது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இது குறித்து தோனி, ரெய்னாவிடம் பேசியும் பலனில்லாமல் போனது. ரெய்னா தொடர்ந்து இது குறித்து சமாதானம் ஆகாமல் இருந்துள்ளார்.

கலவரமடைந்த ரெய்னா

கலவரமடைந்த ரெய்னா

இதன் இடையே, சிஎஸ்கே அணியின் 2 வீரர்களுக்கும், 11 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது அவரை இன்னும் கலவரப்படுத்தி உள்ளது. அதே அறையில் இன்னும் எத்தனை நாட்கள் குவாரன்டைனில் இருப்பது என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.

கொரோனா அச்சம்

கொரோனா அச்சம்

கொரோனா வைரஸ் குறித்த அச்சமும் அவருக்கு இருந்துள்ளது. தோனி சொல்வதை கேட்கும் நிலையில் ரெய்னா இல்லை. இந்த நிலையில் தான் அவரை இந்தியா செல்ல ஒப்புக் கொண்டுள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம். அவர் தனிப்பட்ட காரணங்களால் இந்தியா சென்றதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்தாலும் அதன் பின்னணி இதுதான் என்கிறார்கள்.

ரசிகர்கள் நிலை

ரசிகர்கள் நிலை

தோனி வழியில் செல்வதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா, அவரைப் போன்ற அறை கேட்டதும், அதனால், தோனிக்கும் அவருக்கும் பிளவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுவதும் சிஎஸ்கே ரசிகர்களை மேலும் மனமுடைய வைக்கும் செய்தியாகவே உள்ளது. ரெய்னா குறித்து சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் கடுமையாக பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 31, 2020, 9:50 [IST]
Other articles published on Aug 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+