Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த” சாதனையை செய்வாருன்னு பார்த்தா “இந்த” சாதனையை செய்த தோனி.. ஏதோ நல்லது நடந்தா சரி!!

திருவனந்தபுரம் : இந்திய அணியின் மூத்த வீரர் தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக பத்தாயிரம் ரன்கள் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அந்த சாதனை நிறைவேறவில்லை.

எனினும், அதற்கு மாறாக வேறொரு சாதனை செய்தார் தோனி. இது பேட்டிங்கில் அல்ல. விக்கெட் கீப்பிங்கில்.

தோனி பேட்டிங்கில் சொதப்பினாலும், விக்கெட் கீப்பிங்கில் கலக்கி வருகிறார். அந்த ஒரே காரணத்தால் தான் இந்திய ஒருநாள் அணியில் தோனி நீடித்து வருகிறார். அப்படி என்ன சாதனை செய்தார் தோனி?

தோனி பிடித்த கேட்ச்

தோனி பிடித்த கேட்ச்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் கீரன் போவெல் கொடுத்த கேட்ச்சை தோனி பிடித்தார். அதன் மூலம் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனையை எட்டினார்.

பவுச்சரை முந்தினார் தோனி

பவுச்சரை முந்தினார் தோனி

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தோனி, கீரன் போவெல் விக்கெட்டுடன் சேர்த்து 425 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இதன் மூலம், தென்னாபிரிக்க அணியின் மார்க் பவுச்சர் 424 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். மார்க் பவுச்சர் 290 இன்னிங்க்ஸ்களில் 424 விக்கெட் வீழ்ச்சிகளும், தோனி 327 இன்னிங்க்ஸ்களில் 425 விக்கெட் வீழ்ச்சிகளும் செய்துள்ளனர்.

தோனி மூன்றாம் இடம்

தோனி மூன்றாம் இடம்

ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்ச்சிகள் நிகழ்த்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில், சங்ககாரா 482 விக்கெட் வீழ்ச்சிகளோடு முதல் இடத்திலும், கில்கிறிஸ்ட் 472 விக்கெட் வீழ்ச்சிகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். தோனி தற்போது இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். மார்க் பவுச்சர் நான்காம் இடத்தில் இருக்கிறார்.

அந்த 1 ரன் எடுக்க முடியலையே

அந்த 1 ரன் எடுக்க முடியலையே

ஒருநாள் போட்டிகளில் தோனி தற்போது 10,173 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஆசிய அணிக்காக அவர் எடுத்த 174 ரன்களை நீக்கி விட்டு, இந்திய அணிக்காக மட்டும் 9,999 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 1 ரன் எடுத்தால் இந்திய அணிக்காக பத்தாயிரம் ரன்களை எடுப்பார் என்ற நிலையில், ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. எப்படியோ, விக்கெட் கீப்பிங்கில் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டிவிட்டார் தோனி.

Story first published: Friday, November 2, 2018, 16:18 [IST]
Other articles published on Nov 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+