Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுஷாந்த் சிங் ராஜ்புத் - தோனி.. அந்த வீடியோ.. இதை மறக்க முடியாது.. உருகிய தோனி ரசிகர்கள்!

மும்பை : 2020ஆம் ஆண்டு இதை விட மோசமாக இருக்க முடியாது என்று கூறி சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை நம்ப முடியாமல் பலரும் தவித்து வருகிறார்கள்.

Recommended Video

Modi On Sushant Singh Rajput : சுஷாந்த் சிங் மரணம் அதிர்ச்சியைத் தருகிறது - மோடி

பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நிலையில், அவரது மரணம் கிரிக்கெட் ரசிகர்களையும் பாதித்துள்ளது.

தோனி ரசிகர்கள்

தோனி ரசிகர்கள்

குறிப்பாக தோனி ரசிகர்கள் அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். தங்கள் ஆதர்ச நாயகன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியாகவே வாழ்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தை அவர்களால் மறக்க முடியாது.

தோனி போலவே ஆடி இருப்பார்

தோனி போலவே ஆடி இருப்பார்

அதில் ஒரு காட்சியில் தோனி போலவே கிரிக்கெட் ஆடி இருப்பார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அந்த திரைப்படம் வெளியாகி பல மாதங்களுக்கு பின்னரும் அது குறித்த வீடியோக்கள், மீம்ஸ்கள் வெளியாகி வைரல் ஆகின. தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு பின்னும், அந்த வீடியோ மீண்டும் வைரல் ஆகி வருகிறது.

உலகக்கோப்பை காட்சி

உலகக்கோப்பை காட்சி

தோனி கிரிக்கெட் ஆடும் காட்சியுடன், அவரது நடிப்பை ஒப்பிட்டு இருக்கும் அந்த வீடியோ 2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி குறித்தது. அதை தற்போது மீண்டும் பகிர்ந்து சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து உருகி வருகிறார்கள் தோனி ரசிகர்கள்.

ட்விட்டரில் டிரென்ட்

ட்விட்டரில் டிரென்ட்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தால் ட்விட்டரில் அவரது பெயர் டிரென்ட் ஆகி வருகிறது. அதே சமயம், அவரை அனைவரும் தோனியாக நடித்தவர் என்றே அறிந்து இருப்பதால் எம்எஸ் தோனி என்ற பெயரும் சேர்ந்தே டிரென்ட் ஆகி வருகிறது. தோனி அவரது மரணம் குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை.

Story first published: Sunday, June 14, 2020, 22:26 [IST]
Other articles published on Jun 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+