தோனி எடுத்த புதிய அவதாரம்.. அதுவும் கபில் தேவ்வுடன் சேர்ந்து.. இணையத்தை கலக்கும் வீடியோ!!
ஹரியானா: கபில் தேவ் உடன் சேர்ந்து எம்.எஸ்.தோனி தனது அடுத்த அவதாரத்தை எடுத்திருக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தொடருக்கு பின்னர் என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே இருந்துக்கொண்டே தான் உள்ளது.
அவரின் முதலீடுகள், செயல்பாடுகள் குறித்த புகைப்படங்களும், தகவல்களும் வெளியாகிக்கொண்டே தான் உள்ளன.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் பல தொழில்களில் முதலீடு செய்துள்ள எம்.எஸ்.தோனி சமீபத்தில் கூட ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். கடைசியில் பிரபல பிஸ்கட் நிறுவனமான ஓரியோவுக்காக விளம்பரம் செய்திருந்தார். இந்நிலையில் தோனி இன்று செய்துள்ள விஷயம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் உடன் இணைந்து தோனி கோல்ஃப் விளையாடும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஹரியானாவில் கோல்ஃப் தொடர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அவர்கள் இருவரும் கோல்ஃப் விளையாடி அசத்தினர்.
தோனி ஏற்கனவே கிரிக்கெட்டை தவிர்த்து கால்பந்து மீதும் அதிக ஈர்ப்பு கொண்டவர் ஆகும். தற்போது கோல்ஃப் ஆட்டத்தின் மீதும் ஆர்வம் காட்டியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதனை தோனியின் புதிய அவதாரம் என இணையத்தில் பரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications