Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீவிர பவுலிங் பயிற்சி எடுக்கும் டோணி... ஒருநாள் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கிறாரா? - வீடியோ

தர்மசாலா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த நிலையில் நேற்றைய பயிற்சியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோணி தீவிர பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது அவர் பவுலிங் செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோ காரணமாக இன்று நடக்கும் போட்டியில் டோணி பவுலிங் போடப்போகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பவுலிங் பயிற்சியில் டோணி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் டோணி முதன்முதலாக பவுலிங் செய்து இருந்தார். அப்போது ராகுல் டிராவிட் அந்த ஒரு ஓவர் மட்டும் விக்கெட் கீப்பராக இருந்தார். அந்த பவுலிங் மிகவும் வைரல் ஆனது. அதன்பின் தற்போது நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் டோணி பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவரது பவுலிங் வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ ''டோணியால் செய்ய முடியாத விஷயம் எதுவும் மீதம் இருக்கிறதா? முன்பு அவர் லெக் ஸ்பின் போட்டார், தற்போது வேகப்பந்து வீசுகிறார்'' என்று டிவிட் செய்து இருக்கிறது.

நல்ல வேகம்

இந்த வீடியோ வைரல் ஆகி உள்ளது. இந்த வீடியோவிற்கு இவர் ''டோணி பவுலிங் போடுவதையும், தினேஷ் கார்த்திக் அணியில் இருப்பதையும் யோசித்தால் ஏன் டோணி பவுலராக களம் இறங்க கூடாது என்று கேட்க தோன்றுகிறது. டோணி, ஹர்திக் பாண்டியாவை விட மிகவும் நன்றாக பந்து வீசுகிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கத்துக்குங்க பாஸ்

இந்த நிலையில் இவர் "அகர்கர் டோணியிடம் இருந்து பவுலிங் போட கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். அகர்கர் சில நாட்களுக்கு முன்பு டோணியின் ஆட்டம் குறித்து விமரிசித்து இருந்ததை கலாய்க்கும் வகையில் இவர் இப்படி எழுதியுள்ளார்.

சூப்பர் மேன் டோணி

இந்த நிலையில் இவர் டோணியை பாராட்டி இருக்கிறார். அதில் "டோணியால் செய்ய முடியாதது ஒன்றுமே இல்லை. அவர் ஒரு சூப்பர் மேன். அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

Story first published: Sunday, December 10, 2017, 10:28 [IST]
Other articles published on Dec 10, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+