Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே வரியில் பரபரப்பை கிளப்பிய தோனி.. இந்திய அணிக்கு ஆடுவது பற்றி அதிர வைக்கும் பதில்!

Recommended Video

CSK தான் முக்கியம்... தோனி எடுத்த முடிவு| Dhoni told CSK to not ot retain him

மும்பை : தோனி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவாரா? அல்லது ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என தோனி ரசிகர்கள் கடந்த 2019 உலகக்கோப்பை முதல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

தோனி இதுவரை இந்திய அணிக்கு திரும்புவது பற்றியோ, ஓய்வு முடிவு பற்றியோ வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுபற்றிய கேள்வி ஒன்றிற்கு, "ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள்" எனக் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

உலகக்கோப்பைக்கு பின்..

உலகக்கோப்பைக்கு பின்..

2019 உலகக்கோப்பை தொடரின் முடிவில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், இதுவரை ஓய்வு முடிவை பற்றி பேசாத தோனி, உலகக்கோப்பைக்குப் பின் இந்திய அணிக்காக ஆடவில்லை.

தோனி நிலை

தோனி நிலை

இந்திய அணியின் தேர்வுக் குழு தோனி விடுப்பில் இருக்கிறார் என்றும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை தோனி ஒப்புக் கொண்டார் என்றும் கூறி தோனிக்கு அணியில் வாய்ப்பு அளிக்காமல் இருப்பதை சமாளித்து வருகிறது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

நவம்பர் வரை தோனி விடுப்பில் இருக்கிறார் என முன்பு கூறி இருந்த நிலையில், டிசம்பரில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலும் தோனி பெயர் இடம்பெறவில்லை.

தோனி பயிற்சி

தோனி பயிற்சி

ராஞ்சியில் தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரல் ஆனது. அது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சிலர் 2௦20 ஐபிஎல் தொடருக்காக தோனி தயார் ஆகிறார் என்றனர்.

ரவி சாஸ்திரி பதில்

ரவி சாஸ்திரி பதில்

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி பற்றிய கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கூறி பரபரப்பை கிளப்பினார்.

ஐபிஎல் 2020 முடிவு

ஐபிஎல் 2020 முடிவு

தோனி 2020 ஐபிஎல் தொடரில் ஆடுவதை வைத்து தான் அவர் 2020 டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவாரா? என்பதை கூற முடியும் எனக் கூறி பரபரப்பை கிளப்பி விட்டார் ரவி சாஸ்திரி.

தோனி பதில்

தோனி பதில்

அடுத்து, தோனி ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது அவரிடம் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள்" எனக் கூறி அதிர வைத்தார்.

இலங்கை, ஆஸ்திரேலியா தொடர்கள்

இலங்கை, ஆஸ்திரேலியா தொடர்கள்

ஜனவரி மாதம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் நடைபெற உள்ளன. அந்த தொடரில் தோனி அணியில் இடம் பெறுவதை குறித்து தான் தோனி இப்படி பூடகமாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மாறுபட்ட கருத்துக்கள்

மாறுபட்ட கருத்துக்கள்

தோனியை தாண்டி வந்துவிட்டோம். இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை தோனி ஒப்புக் கொண்டார் எனத் தேர்வுக் குழு கூறுகிறது. 2020 ஐபிஎல்லுக்குப் பின் தோனி பற்றி முடிவு எடுப்போம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகிறார். ஜனவரி வரை கேட்காதீர்கள் என்கிறார் தோனி.

என்ன நடக்குது?

என்ன நடக்குது?

தோனி விஷயத்தில் இந்திய அணியில் என்ன தான் நடக்கிறது? என ரசிகர்கள் குழப்பிப் போய் இருக்கிறார்கள். பெரிய அளவில் குழப்பம் இருப்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாக தெரிகிறது.

Story first published: Thursday, November 28, 2019, 11:36 [IST]
Other articles published on Nov 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+