Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை அவமானப்படுத்துறீங்களா? சாக்ஷி தோனியை திட்டித் தீர்த்த ரசிகர்கள்.. வீடியோவால் வந்த வினை

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தன் மனைவிக்கு ஷூ மாட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இந்த செய்கைக்கு தோனியை புகழ்ந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். அதே சமயம், இந்த வீடியோவை பதிவிட்ட சாக்ஷியை சிலர் திட்டி வருகின்றனர்.

சாக்ஷி போட்ட பதிவில் இருந்த வார்த்தைகள் தான் அதற்கு காரணம். அப்படி என்ன தான் எழுதியிருந்தார்?

தோனி எப்பவுமே இப்படி தான்

தோனி எப்பவுமே இப்படி தான்

தோனி எப்போதுமே எளிமையான, அமைதியான மனிதர் என பெயரெடுத்தவர், "கேப்டன் கூல்" என முதன் முதலாக ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதை தனதாக்கிக் கொண்டவர். அதன் மற்றொரு வெளிப்பாடாகவே தன் மனைவிக்கு ஷூ அணிவித்து விட்டார்.

எதிர்வினை என்ன?

எதிர்வினை என்ன?

பொதுவான மக்களை பொறுத்தவரை இது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. தோனி ரசிகர்களுக்கு இது பெரிய விஷயம். அவர்கள் தோனியை புகழ்ந்து தள்ளினர். அத்துடன் இந்த வீடியோவுக்கான எதிர்வினை முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

சாக்ஷி போட்ட பதிவு என்ன?

ஆனால், சாக்ஷி இந்த வீடியோவை பகிர்ந்து, "நீங்க தான் காசு கொடுத்து இந்த ஷூவை வாங்குனீங்க.. நீங்களே மாட்டி விடுங்க" என எழுதியிருந்தார். இதை ஒரு கணவன் - மனைவிக்கிடையே உள்ள கேலியான விஷயமாகவே எழுதி இருந்தார்.

திட்டு விட்ட ரசிகர்கள்

திட்டு விட்ட ரசிகர்கள்

ஆனால், சிலர் இதை தோனியை அவமானப்படுத்தும் விஷயமாக பார்த்து, சாக்ஷிக்கு திட்டு விட்டனர். "தோனி இல்லாவிட்டால் உங்களை எங்களுக்கு யார் என்றே தெரியாது", "தோனி தான் உங்களுக்கு இந்த பகட்டான வாழ்க்கையை கொடுத்தார். அவரையே அவமானப்படுத்தும் வகையில் இப்படி ஷூ மாட்டுவதை வீடியோ எடுத்துள்ளீர்கள்" என்ற தொனியில் ரசிகர்கள் திட்டத் துவங்கி விட்டனர்.

பகிர்வதை தவிர்க்க வேண்டும்

பகிர்வதை தவிர்க்க வேண்டும்

சமூக வலைதளங்கள் வந்த பின்னர் பிரபலங்கள் எதை தான் பகிர்வது என்ற விவஸ்தை இல்லாமல் தினசரி வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் திட்டுவதும். இது போன்ற தனிப்பட்ட, மக்களுக்கு தேவையற்ற விஷயங்களை பகிர்வதை நிறுத்தினால் எல்லோருக்கும் நல்லது.

Story first published: Monday, December 17, 2018, 13:15 [IST]
Other articles published on Dec 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+