Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்ப அது உண்மை தானா? 7 மணிக்கு ஓய்வு அறிவிப்பா? உணர்ச்சி கொந்தளிப்பில் தோனி ரசிகர்கள்

Recommended Video

Dhoni may retire today gossip spreads fast in twitter

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி இன்று ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறார் என அவரது ரசிகர்கள் பரபரப்பில் இருக்கிறார்கள்.

குறிப்பாக இரவு ஏழு மணிக்கு தோனி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன் ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளம் முழுவதும் தோனி ரசிகர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்ளன.

மர்மம்

மர்மம்

2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்ற பேச்சு இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை, தோனி ஓய்வை பற்றி எதுவும் பேசவில்லை. அவர் எதிர்கால முடிவு குறித்து மர்மம் நீடித்தது.

தோனியே விலகிவிட்டார்

தோனியே விலகிவிட்டார்

உலகக்கோப்பை தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல், இரண்டு மாத கால ஓய்வு எடுத்துக் கொண்டார் தோனி. அடுத்து தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் அவர் பெயர் அணியில் சேர்க்கப்படவில்லை. தோனியே விலகிவிட்டார் என்றார்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு

பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்த நிலையில், மாலை ஏழு மணி அளவில் தோனியின் மானேஜர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் தோனி ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.

தோனி ரசிகர்கள் கருத்து

ட்விட்டர் முழுவதும் பலரும் ஏழு மணிக்கு தோனி ஓய்வு அறிவிப்பு என கூறி வருகிறார்கள். தயவு செய்து ஓய்வு பெற வேண்டாம் என்றும் பதிவிட்டு வருகிறார்கள் தோனி ரசிகர்கள்.

பொய்யான தகவல்

சிலர் ஏழு மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு என்பது பொய்யான தகவல் என கூறி வருகின்றனர். எனினும், சிலர் விராட் கோலி இன்று தோனிக்கு பெருமை சேர்ப்பது போல, வெளியிட்ட பதிவை குறிப்பிட்டு, தோனி ஓய்வு உண்மை தான் என கூறி வருகின்றனர்.

கோலி பதிவு

கோலி பதிவு

2016 டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி தன்னை எப்படி ஓட வைத்தார் என்பதை நினைவு கூர்ந்து இருந்தார். அந்தப் போட்டியில் வெற்றிக்கு பின் கோலி கீழே விழுந்து கிடக்கும் போது, தோனி மட்டும் கம்பீரமாக நடந்து வரும் காட்சியை பகிர்ந்து இருந்தார்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

அதை வைத்து, கோலி இன்று ஏன் திடீர் என தோனி பற்றி புகழ்ந்து ஒரு பதிவு போட வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இது வெறும் வதந்தியா? உண்மையா? என்ன நடக்கிறது என 7 மணிக்கு தெரிய வரும்.

Story first published: Thursday, September 12, 2019, 16:02 [IST]
Other articles published on Sep 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+