Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளை 4வது போட்டி.. டோணிக்கு ரொம்ப முக்கியம்.. ஏன் தெரியுமா?

கொழுப்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா ஏற்கனவே வென்றுள்ள நிலையில், நாளை 4வது ஒருதினப் போட்டி, நடக்க உள்ளது. மற்றொரு ஒயிட்வாஷ் செய்வதற்கு இந்தியா தயாராக இருந்தாலும், இந்தப் போட்டி, டோணிக்கு மற்றொரு முக்கியமான ஆட்டமாகும்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3-0 என, டெஸ்ட் தொடரை வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரை 3-0 என, ஏற்கனவே வென்றுவிட்டது. இரு அணிகளுக்கும் இடையேயான, 4வது ஒருதினப் போட்டி நாளை நடக்க உள்ளது.

மோசமான ஆட்டங்கள், காயங்கள் என, சிக்கி திணறி கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு மற்றொரு சோதனையாக, முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா தலைமையிலான தேர்வுக் குழுவும் கூண்டோடு கூடாக ராஜினாமா செய்துள்ளது.

கலக்கும் இந்தியா

கலக்கும் இந்தியா

இது ஒரு புறம் இருந்தாலும், 2019 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்தது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளது.

கூல் டோணி

கூல் டோணி

நாளை நடக்கும் நான்காவது போட்டி, சும்மா பெயரளவுக்கே நடந்தாலும், கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணிக்கு, இது, 300வது ஒருதினப் போட்டியாகும்.

குட் பெர்பார்மன்ஸ்

குட் பெர்பார்மன்ஸ்

இந்த ஒருநாள் தொடரில், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக, மிக நீண்ட அனுபவம் உள்ள டோணியின் ஆட்டம் மற்றும் செயல்பாடுகளே காரணமாக அமைந்துள்ளது. தனது, 300வது ஒருதினப் போட்டியில், அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சச்சின் லீடிங்

சச்சின் லீடிங்

இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர், 463 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகத் திகழ்கிறார். ராகுல் டிராவிட், 344, முகமது அசாருதீன், 334, சவுரவ் கங்குலி, 311, யுவராஜ் சிங், 304 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

2019க்குத் தயாராகும் டோணி

2019க்குத் தயாராகும் டோணி

2007ல் டி-20 உலகக் கோப்பை, 2011ல் உலகக் கோப்பையை கேப்டனாக வென்றுள்ள டோணி, 2019ல் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறார்.

முக்கிய மைல் கல்

முக்கிய மைல் கல்

அந்த வகையில், நாளை நடக்க உள்ள, 300வது போட்டி, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில், மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.

Story first published: Wednesday, August 30, 2017, 16:20 [IST]
Other articles published on Aug 30, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+