Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சல்யூட் தல.. ஆகஸ்ட் 15 வரை காஷ்மீர் இராணுவப் பணியில் தோனி.. மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்!

Recommended Video

Dhoni in Army : ஆகஸ்ட் 15-ல் காஷ்மீரில் தோனி.. உற்சாகத்தில் ரசிகர்கள்- வீடியோ

டெல்லி : இந்திய இராணுவத்தில் இரண்டு மாதம் பயிற்சி செய்ய சென்றுள்ள தோனி, காஷ்மீரில் பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது இந்திய இராணுவம்.

தோனி இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனல் என்ற பதவியில் இருக்கிறார். பாராஷுட் ரெஜிமென்ட் பிரிவில் அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

கௌரவ பதவி தான் என்றாலும், தோனி இராணுவம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இராணுவ பயிற்சி மற்றும் பணிகளில் ஈடுபட உள்ளார்.

இரண்டு மாத விலகல்

இரண்டு மாத விலகல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய தோனி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு இராணுவத்தில் பயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். தோனிக்கு அணியில் இடம் அளிப்பது குறித்து வதந்திகள் நிலவி வந்த போது இந்த அதிரடி முடிவை எடுத்தார் தோனி.

இராணுவம் அனுமதி

இராணுவம் அனுமதி

பின்னர், இந்திய இராணுவம் அவருக்கு அனுமதி அளித்தது. தோனி பயிற்சி மற்றும் அடிப்படை பணிகளில் மட்டுமே ஈடுபட முடியும். இராணுவ தாக்குதல்களில் ஈடுபட முடியாது எனவும் விளக்கம் அளித்தது.

16 நாட்கள் பணி

16 நாட்கள் பணி

இந்த நிலையில், தோனி வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 31 வரை 106 டிஏ பட்டாலியனில் பணிபுரிய உள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. இந்த குழு, காஷ்மீரில் இருக்கும் "விக்டர் ஃபோர்ஸ்" எனும் படையின் ஒரு அங்கமாக செயல்பட உள்ளது. இதன்படி பார்த்தால் சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் இந்திய இராணுவ பணியில் ஈடுபட்டு இருப்பார் தோனி.

முந்தைய நிகழ்வுகள்

முந்தைய நிகழ்வுகள்

முன்னதாக 2015ஆம் ஆண்டில் ஐந்து முறை பாராஷுட்டில் குதித்து பயிற்சி செய்து, பாராட்ரூப்பர் என்ற தகுதியை பெற்றார் தோனி. அதன் பின் தற்போது, இராணுவப் பணியில் ஈடுபட உள்ளார். தோனிக்கு இராணுவத்தின் மீது உள்ள ஈடுபாட்டின் காரணமாகவே அடிக்கடி இது போன்ற பயற்சிகளில் தாமாகவே முன்வந்து ஈடுபடுகிறார்.

இராணுவம் ரொம்ப பிடிக்கும்

இராணுவம் ரொம்ப பிடிக்கும்

2011ஆம் ஆண்டு தோனிக்கு கௌரவ லெப்டினன்ட் கலோனல் என்ற பதவி வழங்கப்பட்ட போது பேசிய அவர், சிறுவயது முதலே இராணுவத்தில் சேர ஆசைப்பட்டதை பற்றி கூறினார். அந்த தாக்கம் தான் இப்போது அவரை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டுகிறது என மெய்சிலிர்த்து கூறுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Story first published: Thursday, July 25, 2019, 15:23 [IST]
Other articles published on Jul 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+