Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாப்பிள்ளை இவருதான், சட்டை அவரோடது இல்லை.. கோஹ்லி நிலைமையை பாருங்க

நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற, 2வது டி20 போட்டியில் பரபரப்பு கட்டத்தில் இந்திய அணியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கேப்டன் கோஹ்லிக்கு பெப்பே என்று சொல்லிவிட்டார் முன்னாள் கேப்டன் டோணி. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.

கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது டோணி, கோஹ்லிக்கு சில டிப்சுகளை கொடுத்தார்.

ஃபீல்டர்களை எங்கே நிறுத்துவது என்பதையும் டோணியே முடிவு செய்தார். போட்டி முடிந்த பிறகு கோஹ்லி இதை ஒப்புக்கொண்டார். டோணியின் ஆலோசனை அணி வெற்றிக்கு உதவியதாக அவர் புகழாரம் சூட்டினார்.

மாப்பிள்ளை இவருதான்

மாப்பிள்ளை இவருதான், சட்டை என்னோடது என்ற புகழ்பெற்ற, படையப்பா பட காமெடி காட்சி, கோஹ்லி-டோணி கூட்டணிக்கு பக்காவாக பொருந்திப்போகிறது.

கண்ணு வேற்க்கு

கோஹ்லி முடிவெடுக்கும் முன்பே டோணி முடிவெடுத்து பவுலர்களுக்கு ஒத்தாசை செய்வதை ஆனந்தம் திரைப்பட காட்சியோடு ஒப்பிட்டுச் சொல்கிறது இந்த டிவிட்.

கேமராக்கள் பார்வை

கடைசி கட்ட ஓவர்களில் கேப்டன் கோஹ்லியை தவிர்த்துவிட்டு டிவி சேனல் கேமராக்கள் டோணியையே ஃபோகஸ் செய்தன. காரணம் அவர்தான் ஃபீல்டர்களை சரியான இடங்களில் நிறுத்திக்கொண்டிருந்தார்.

அன்பழகன் பாராட்டு

திமுக எம்.எல்.ஏவான ஜெ.அன்பழகனும், டோணிதான் வெற்றிக்கு காரணம் என்று பாராட்டியுள்ளார். போட்டி நடைபெற்றபோது இவர் அதை கவனித்து தொடர்ச்சியாக டிவிட்டுகளை வெளியிட்டபடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 31, 2017, 13:39 [IST]
Other articles published on Jan 31, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+