VIRAL: வீட்டுக்கு போக பிளானா..? எங்கிட்ட நடக்காது தம்பி... கேதர் ஜாதவை கலாய்க்கும் தல தோனி
சென்னை:வீட்டுக்கு போக பிளான் போடுறியா... அது என்கிட்ட நடக்காது என்று கேதர் ஜாதவை தோனி கலாய்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 23ம் தேதி சென்னையில் தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற தொடக்க போட்டியில் தல தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
அதில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் பந்துவீச்சில் வெறும் 70 ரன்களுக்குள் பெங்களூரு அணி சுருண்டது தோல்வியை தழுவியது.
நாளை 2வது போட்டி
இதனை அடுத்து, சென்னை அணி தனது 2வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி நாளை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்காக சென்னை அணி வீரர்கள் விமானம் மூலம் புறப்பட்டனர்.

மொஹித் வீடியோ
விமானத்திற்கு காத்திருந்தபோது, மொஹித் சர்மா எடுத்த வீடியோவில் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் தொடக்க போட்டி குறித்து பேசி கொண்டிருந்தார். அவர் கூறியதாவது:
தோனியின் கலாய்ப்பு
அப்போது, கடந்த சீசனைப் போலவே இந்த சீசனும் வெற்றியுடன் தொடங்கி உள்ளது. அப்போதும் நான் களத்தில் இருந்தேன் என அவர் தெரிவித்தார். அருகில் இருந்த தோனி, அப்போ இந்த முறையும் வீட்டுக்கு போக திட்டமிட்டுள்ளாயா? என்று கலாய்த்தார்.

தொடரில் விலகல்
கடந்த சீசனில் முதல் போட்டியில் மட்டும் விளையாடிய கேதர் ஜாதவ், காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகினார். அதை வைத்து தான தோனி இப்போது கலாய்த்திருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications