சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் வரும் 24ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான கோப்பையை, இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டோணி சென்னையில் இன்று அறிமுகபப்டுத்தினார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் முதன்முறையாக தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன. தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு, தேசிய அளவிலான டி 20 போட்டிகளில் விளையாட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும், கிராமங்களில் உள்ள வீரர்களுக்கு டி 20 அளவிலான போட்டிகளில் விளையாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் இப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், மதுரை, தூத்துக்குடி, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காரைக்குடி, திண்டுக்கல், கோவை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. சென்னை, மதுரை, தூதுக்குடி உள்ளிட்ட எட்டு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன.
இந்த கோப்பைக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் போட்டியில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
விழா தொடங்கியதும் ஒவ்வொரு அணியின் லோகோவும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசினார். பின்னர் கோப்பையை டோணி அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், இந்த தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையயை வளர்த்துக் கொள்ள உதவும் என்று தெரிவித்தார்.
இந்த போட்டித் தொடர் வரும் 24-ந்தேதி தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகள், சென்னை, திண்டுக்கல் (என்பிஆர் கல்லூரி நத்தம்) மற்றும் திருநெல்வேலி (இந்தியா சிமென்ட், சங்கர் நகர்) கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளன. அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் நடக்கின்றன.