Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி உன்னை டீமை விட்டு தூக்கப் போறேன்.. சிஎஸ்கே வீரரை மிரட்டிய தோனி.. 4 நாள் முன் நடந்த சம்பவம்!

சென்னை : நான்கு நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர், தோனியுடன் விளையாட்டாக கேள்வி கேட்டுள்ளார்.

அந்த பேச்சு வளர்ந்து கொண்டே போய் ஒரு கட்டத்தில் தோனி, "ஐபிஎல் ஏலம் வருதுன்னு எனக்கு ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி" எனக் கூறி ஏலத்தில் வாங்காமல் அணியை விட்டு நீக்கப் போவதாக வேடிக்கையாக மிரட்டி உள்ளார்.

இந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி தீபக் சாஹர் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

வீடியோ கேம்

வீடியோ கேம்

தோனி லாக்டவுன் நேரத்தில் ஜாலியாக வீடியோ கேம் ஆடி வருகிறார். பப்ஜி (PUBG) விளையாட்டை நண்பர்கள், சக கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடி வருகிறார். அதில் தீபக் சாஹரும் ஒருவர். தீபக் சாஹர் சிஎஸ்கே அணியில் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

தீபக் சாஹர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். 2018 ஐபிஎல் தொடரில் அவரை ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி. அந்த சீசனில் அவர் வேகப் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். சிஎஸ்கே அணி 2018 ஐபிஎல் கோப்பை வென்றதில் அவருக்கும் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டு.

2019 ஐபிஎல்

2019 ஐபிஎல்

ஆனால், 2019 ஐபிஎல் தொடரில் தான் அவரது முழு திறனும் வெளிவந்தது. அதற்கு தோனியும் இரு முக்கிய காரணம். அந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சரியான வேகப் பந்துவீச்சாளர் இல்லாத நிலையில், சர்வதேச அனுபவம் குறைந்த தீபக் சாஹரை பயன்படுத்தி தோனி இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே அணியை வழி நடத்திச் சென்றார்.

தோனி தான் காரணம்

தோனி தான் காரணம்

2019 ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் 17 போட்டிகளில் 22 விக்கெட்கள் வீழ்த்தினார். தோனி தான் தனது முன்னேற்றத்துக்கு காரணம் என பல முறை கூறி உள்ளார் தீபக் சாஹர். இந்த நிலையில், அவர் கடைசி ஓவர்களில் தோனியை எப்படி வீழ்த்துவது என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

சிறந்த பினிஷர்

சிறந்த பினிஷர்

தோனி சிறந்த பினிஷர் என பெயர் பெற்றவர். இறுதி ஓவர்களில் அதிக சிக்ஸர், ஃபோர் அடிக்கக் கூடியவர். அவருக்கு கடைசி ஓவர்களில் பந்து வீசுவது கடினமான காரியம். தீபக் சாஹர் தோனிக்கு எதிராக கடைசி ஓவர்களில் எந்த வகை பந்துவீச்சை பயன்படுத்துவார்?

தோனியிடம் கேட்டார்

தோனியிடம் கேட்டார்

தீபக் சாஹர் இதுபற்றி கூறுகையில், தான் நான்கு நாட்களுக்கு முன் தோனியிடம் இது பற்றி கேட்டதாக குறிப்பிட்டார். அப்போது தோனி தனக்கு கடைசி ஓவர்களில் நக்குள் (Knuckle) பந்து வீசுவது சரியாக இருக்கும் என கூறி உள்ளார். தோனி நக்குள் பந்தை எளிதாக அடித்து ஆடுவார் என்பதே உண்மை.

மிரட்டல்

மிரட்டல்

தோனி தன்னை கலாய்க்கிறார் என்பதை கண்டு கொண்ட தீபக் சாஹர் தான் வைடு யார்க்கர் மற்றும் வைடு பவுன்சர் வீசுவேன் என கூறி உள்ளார். அது தோனிக்கு கடினமான பந்துவீச்சு. இந்த நிலையில் தோனி, ஏலம் வருவதை நினைவு படுத்தியதற்கு நன்றி எனக் கூறி அவரை அடுத்த ஏலத்தில் அவரை வாங்க மாட்டோம் என மிரட்டி உள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயன்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்காமல் போனால், அடுத்த 2021 ஐபிஎல்லுக்கு முன் மெகா ஏலம் நடத்தப்படும். அதை குறித்தே தோனி வேடிக்கையாக மிரட்டி உள்ளார்.

Story first published: Monday, June 8, 2020, 13:39 [IST]
Other articles published on Jun 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+