Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீரர்கள் எங்கயும் எப்பயும் தோனிகிட்ட அறிவுரை கேட்டுக்கலாம்... அவர் தயாரா இருப்பாரு

டெல்லி : இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த காலத்திலும், தற்போது சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்பட்டுவரும் சூழலிலும் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு எப்போதும் தயாராக இருப்பார் தோனி என்று முன்னாள் பௌலர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dhoni was always open to a chat with players: Nehra

போட்டிகள் முடிந்தவுடன் மைதானத்திலும், தன்னுடைய ஹோட்டல் அறையில் நள்ளிரவு நேரத்திலும் கூட வீரர்கள் கலந்துரையாட அவர் எப்போதும் தயாராக இருப்பார் என்று நெஹ்ரா கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ராவின் ஆகாஷ்வாணி ஷோவிற்காக பேசிய ஆஷிஷ் நெஹ்ரா இவ்வாறு கூறியுள்ளார்.

ஆகாஷ்வாணி ஷோவில் உரையாடல்

ஆகாஷ்வாணி ஷோவில் உரையாடல்

முன்னாள் பௌலர் ஆஷிஷ் நெஹ்ரா முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ராவின் ஆகாஷ்வாணி ஷோவில் அவருடன் உரையாடினார். அப்போது முன்னாள் கேப்டன்கள் தோனி, கங்குலி உள்ளிட்டவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார். இந்திய அணிக்காக நெஹ்ரா, 17 டெஸ்ட்கள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அனைவரும் எட்டும் தூரத்தில் தோனி

அனைவரும் எட்டும் தூரத்தில் தோனி

இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதிலும் தற்போது ஐபிஎல் அணியான சிஎஸ்கேவின் கேப்டனாக உள்ள போதிலும், அணியின் அனைத்து வீரர்களுடனும் உரையாட எப்போதும் தயாராக தோனி இருப்பார் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார். மைதானத்தில் போட்டி முடிந்தவுடனும், மற்றும் ஹோட்டல் அறையில் நள்ளிரவிலும் கூட அவருடன் பேசி ஆலோசனைகளை வாங்க முடியும் என்ற நெஹ்ரா கூறியுள்ளார்.

நெஹ்ரா புகழ்ச்சி

நெஹ்ரா புகழ்ச்சி

நள்ளிரவு நேரத்திலும் கூட தோனியின் ஹோட்டல் அறைக்கு நடந்து சென்று, அங்கேயே, உணவை ஆர்டர் செய்து பின்பு கிரிக்கெட் குறித்து அவருடன் நீண்ட நேரங்கள் உரையாடும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும் என்றும் அவர் கூறியள்ளார். என்ன விஷயங்களை தன்னுடைய ஆட்டத்தில் புகுத்தினால், தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்து இந்த உரையாடலின்போதே தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கங்குலி குறித்து நெஹ்ரா

கங்குலி குறித்து நெஹ்ரா

இதேபோல முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் தன்னுடைய அணியில் விளையாடும் வீரர்களுக்கு பின்னாலிருந்து அவர்களை ஏற்றி விடுவதில் வல்லவர் என்றும் நெஹ்ரா தெரிவித்துள்ளார். தோனி தனது அணியின் மூத்த வீரர்களை சமாளிப்பது குறித்து சிறப்பாக செயல்படும் நிலையில், கங்குலி தன்னுடய அணியின் இளம்வீரர்களை ஏற்றி விடுவதில் கவனம் செலுத்துவார் என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 7, 2020, 21:07 [IST]
Other articles published on May 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+