பட்டையைக் கிளப்பிட்டியே பாண்டியா... டோணியைப் புகழும் ஹர்பஜன் சிங்
இந்தூர்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியின்போது டோணியின் கேப்டன்ஷிப் அட்டகாசமாக இருந்தது என்று பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
மிக அருமையாக அணியை வழிநடத்தினார் டோணி. அணியை அவர் வெற்றிக்கு இட்டுச் சென்ற விதம் பிரமிக்க வைத்தது என்றும் ஹர்பஜன் பாராட்டியுள்ளார்.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங்கிலில் அடித்து நொறுக்கிய டோணி, பின்னர் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி தென் ஆப்பிரிக்காவை சுருட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிவில் ஹர்பஜன் சிங் பேசுகையில் கூறியதாவது....

அட்டகாசம்
கேப்டன்ஷிப்பில் டோணி அட்டகாசமாக செயல்பட்டார். பேட் செய்வதற்கு நல்ல விக்கெட் இது. அதேசமயம், மெதுவாக பந்து வீசியபோது மட்டுமே பந்து சுழன்றது.

பிரஷர் கொடுத்தோம்
தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கின்போது அங்குமிங்கும் சிக்ஸர்கள் பறந்தபோதும் நாங்கள் நன்றாகவே நெருக்கடியை ஏற்படுத்தினோம். அக்ஷார் படேல் முக்கியமான 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

கொஞ்சம் பயந்தோம்
30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டது தவறாகப் போய் விடுமோ என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் முழு எனர்ஜியோடு செயல்பட்டால் அவர்களின் 25 ரன்களை நிச்சயம் குறைக்கலாம் என டோணி நம்பிக்கை கொடுத்தார்.

திட்டமிட்ட ஆட்டம்
இதனால் திட்டமிட்டு ஆடினோம். நினைத்தபடி பந்து வீசினோம். அதேபோல ஆட்டமும் எங்களுக்கு சாதகமாக முடிந்தது என்றார் ஹர்பஜன் சிங். நேற்றைய போட்டியில் ஹர்பஜன் சிங்கும் 2 விக்கெட்களைச் சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications