Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்கை வரலாற்று படத்துக்காக தோனி பெற்ற தொகை.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்.. சுஷாந்த் சிங்கிற்கு அநீதி?

மும்பை: தன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துக்கொள்வதற்காக மிகப்பெரும் தொகையை எம்.எஸ்.தோனி வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்தவர் மகேந்திர சிங் தோனி. 2007 முதல் 2016 வரை இந்திய அணியை அனைத்து வடிவ போட்டிகளிலும் டாப் இடத்தில் வைத்திருந்தவர்.

2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் போது சீனியர் வீரர்கள் ஒதுங்கி நின்ற போது, தைரியமாக இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்ததில் தொடங்கிய அவரது பயணம் நெடுந்தூரம் சென்றது.

 வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

இந்தியர்களின் நீண்ட வருட கனவாக இருந்த 50 ஓவர் உலகக்கோப்பையை கடந்த 2011ம் ஆண்டு தனது மேட்ச் ஃபினிசிங் சிக்ஸர் மூலம் அசத்தலாக வென்று கொடுத்தார் தோனி. அதுமட்டுமல்லாமல் ஐசிசி-ன் மூன்று கோப்பைகளையும் வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையும் தோனியையே சேர்ந்தது. இப்படிப்பட்ட தோனி கிரிக்கெட் மட்டும் அல்லாமல் விளம்பர படங்கள் மூலமும் பெரிய அளவில் வருமானம் ஈட்டி வருகிறார். பாலிவுட் திரையுலகும் அவரின் திறமையை அங்கீகரித்து அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கியது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் உருவான இந்த படம் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் தோனியாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்-ம், சாக்‌ஷி தோனியாக கைரா அத்வானியும் நடித்திருந்தனர். எதிர்பார்த்ததை விட பெரியளவில் ரசிகர்களிடம் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தது.

தோனியின் சம்பளம்

தோனியின் சம்பளம்

இத்திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துக்கொள்வதற்கு தோனி பெற்ற தொகையின் விவரம் வெளியாகியுள்ளது. 'தி குயிண்ட்' பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த படத்திற்காக ரூ. 45 கோடி பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் தனிப்பட்ட கதை மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு, இந்த படத்தின் பிரமோஷன்களில் தோனி ஈடுபடுவதற்கு சேர்த்து இந்த தொகையானது கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

படத்தின் கதையை கொடுத்த தோனிக்கு ரூ.40 கோடி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங்கிற்கு வெறும் ரூ.2 கோடி மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. தோனியின் மேலாளர் அருண் பாண்டே இந்த படத்தின் 2வது தயாரிப்பாளர் ஆவார். அவருக்கு கூட இந்த படத்திற்கு ரூ.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி பிடித்த சுஷாந்த் சிங்கிற்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, May 26, 2021, 18:00 [IST]
Other articles published on May 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+