Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை விட போன் தான் முக்கியமா? இப்ப என்ன பண்றேன் பாரு ஸ்வீட்டி.. சாக்ஷி தோனியின் ரொமாண்டிக் போட்டோ!

ராஞ்சி : கிரிக்கெட் வீரர் தோனி லாக்டவுனில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

Recommended Video

Sakshi craves attention from ‘Sweetie’ Dhoni, shared a romantic pic

இந்த நிலையில், தோனி படுக்கையில் தன் ஐ-பேடில் பிஸியாக இருக்க, அவரது மனைவி சாக்ஷி அவரது கவனத்தை பெற என்ன செய்தார் தெரியுமா?

அதைத் தான் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி இருக்கிறார் சாக்ஷி.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பல விதத்தில் உலகில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டுத் துறையை பொறுத்தவரை மொத்தமாக முடங்கி உள்ளது. ஆங்காங்கே சில நாடுகளில் சில விளையாட்டுக்கள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரும் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

2020 ஐபிஎல் தடை

2020 ஐபிஎல் தடை

2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்று இந்திய அணியில் இடம் பெறலாம் என எண்ணி இருந்தார் தோனி. 2020 டி20 உலகக்கோப்பை அணியில் தோனி இடம் பெற ஆவலாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த கனவையும் உடைத்துள்ளது கொரோனா வைரஸ்.

சிக்கல்

சிக்கல்

ஐபிஎல் போட்டியில் தன் பார்மை நிரூபிக்காமல் தோனியால் இந்திய அணியில் இடம் பெற முடியாது என்பதே இப்போதுள்ள நிலைமை. இந்த நிலையில் தான் தோனி லாக்டவுன் நேரத்தை ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் செலவிட்டு வருகிறார்.

ஸிவா வீடியோக்கள்

ஸிவா வீடியோக்கள்

அங்கே தன் மகள் ஸிவாவுடன் வேடிக்கையாக நேரத்தை செலவிட்டு வருகிறார். அது தொடர்பான வீடியோக்கள் சில நாட்கள் முன்பு வைரலாக பரவியது. தோனி பண்ணை வீட்டில் புல்வெளியை சமப்படுத்தும் பணி செய்த வீடியோவும் வெளியானது.

ரொமாண்டிக் புகைப்படம்

ரொமாண்டிக் புகைப்படம்

இந்த நிலையில், நேற்று தோனியின் மனைவி சாக்ஷி ஒரு ரொமாண்டிக் புகைப்படம் வெளியிட்டுள்ளார். தோனி தன்னை பார்க்காமல், ஐ-பேடை பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டு, அவரது கவனத்தை பெற முயற்சி செய்துள்ளார்.

ஸ்வீட்டி தோனி

ஸ்வீட்டி தோனி

இதை அடுத்து, தோனியின் கால் விரல்களை கடிக்க முயற்சி செய்துள்ளார். அதை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் தோனியை ஸ்வீட்டி என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் "ஸ்வீட்டியின் கவனத்தை பெற முயற்சி செய்யும் போது.." என குறிப்பிட்டுள்ளார்.

வைரல் பதிவு

வைரல் பதிவு

அந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளி உள்ளது. இதற்கு முன்னதாக அந்த பண்ணை வீட்டையே சுற்றி, சுற்றி புகைப்படம் எடுத்தும் சாக்ஷி பதிவிட்டுள்ளார்.

Story first published: Monday, April 20, 2020, 11:06 [IST]
Other articles published on Apr 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+