Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது கோலிக்கு முன்பே தெரியும்.. நிச்சயம் தோனி ஓய்வு அறிவிப்பார்.. ஆதாரம் காட்டும் சிலர்!

Recommended Video

Dhoni may retire today gossip spreads fast in twitter

மும்பை : தோனி இன்று ஒய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறார். அதற்கான ஆதாரம் இதோ என கோலி வெளியிட்ட ஒரு பதிவை காட்டுகிறார்கள் சில ரசிகர்கள்.

தோனி ஓய்வு பெறப் போகிறார் என இணையத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதற்கு காரணம் இரண்டு விஷயம். ஒன்று தோனி இன்று (செப்டம்பர் 9) இரவு ஏழு மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார் எனும் செய்தி.

சந்தேகம்

சந்தேகம்

மற்றொன்று, இந்திய அணி கேப்டன் விராட் கோலி போட்ட பதிவு. முதலில் தோனி பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போகிறார் என்று வந்த போதே ரசிகர்கள் சிலர் ஓய்வு அறிவிப்பா? என சந்தேகம் கிளப்பினார்கள்.

தோனியை புகழ்ந்தார்

ஆனால், அந்த செய்தியே தவறு என சிலர் கூறி வந்தனர். அந்த நேரத்தில் தான் விராட் கோலியின் பதிவு ஒன்று வெளியானது. அந்த பதிவில் 2016ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் ஒன்றை கூறி தோனியை புகழ்ந்து இருந்தார் விராட் கோலி.

எந்தப் போட்டி?

எந்தப் போட்டி?

கடந்த 2016 டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் இருந்தது. 161 ரன்களை இந்தியா சேஸ் செய்ய வேண்டும் என்ற நிலை.

6 ஓவர்களில் 67 ரன்கள்

6 ஓவர்களில் 67 ரன்கள்

அப்போது யுவராஜ் சிங் பந்தை அடிக்கவே தடுமாறி வந்தார். அவர் 14வது ஓவரில் ஆட்டமிழந்த பின்னர் தோனி களமிறங்கினார். அவருடன் கோலி கூட்டணி அமைத்தார். இந்தியா 6 ஓவர்களில் 67 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

ஓடி ஓடியே காலி செய்தனர்

ஓடி ஓடியே காலி செய்தனர்

தோனி, கோலி இருவரும் விக்கெட்கள் இடையே வேகமாக ஓடி ஓடியே ரன் குவித்தனர். ஆஸ்திரேலிய பீல்டர்கள் தவித்து தண்ணீர் குடித்தனர். அந்த அளவுக்கு ரன் அவுட் கூட ஆக்க முடியாத அளவுக்கு இருவரும் ரிஸ்க்கான சிங்கிள்களை எடுத்தனர்.

கோலி ஓட்டம்

கோலி ஓட்டம்

கடைசி ஓவர்களில் ஒரே ஓவரில் நான்கு முறை இரண்டு ரன்கள் எல்லாம் ஓடினார்கள். தோனி அப்படி ஓடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், கோலி அப்படி ஓடுவதை அன்று தான் பலரும் பார்த்தனர்.

திடீர் புகழ்ச்சி

திடீர் புகழ்ச்சி

அந்தப் போட்டியில் இந்திய அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்றது. அந்தப் போட்டி குறித்த நினைவுகளை திடீரென இன்று பகிர்ந்த விராட் கோலி, தோனி பற்றி புகழ்ந்து கூறி இருந்தார்.

அது ஸ்பெஷல் இரவு

அது ஸ்பெஷல் இரவு

தன் பதிவில், அந்தப் போட்டியை மறக்கவே முடியாது. ஸ்பெஷல் இரவு. இந்த மனிதர், என்னை உடற்தகுதி தேர்வுக்கு ஓட வைப்பது போல ஓட வைத்தார் எனக் குறிப்பிட்டு தோனியை புகழ்ந்து இருந்தார் கோலி.

தோனி ஓய்வு உறுதி

எந்த சம்பந்தமும் இல்லாமல் இன்று ஏன் கோலி தோனியை பாராட்டி பதிவை போட வேண்டும் என ரசிகர்கள் சிந்தித்தனர். முன்னதாக ஏழு மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற செய்தியும் வந்ததால், தோனி ஓய்வு உறுதி தான் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

முன்பே தெரியும்

கோலிக்கு அது முன்பே தெரியும் என்பதால் தான் அவர், தோனியை நினைவு கூரும் பதிவை பகிர்ந்துள்ளார் என்று அந்த பதிவையே ஆதாரமாக கூறி வருகிறார்கள். ட்விட்டரில் தோனியின் பெயர் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Story first published: Thursday, September 12, 2019, 17:13 [IST]
Other articles published on Sep 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+