என்னது டோணி சம்பளம் குறையப் போகுதா?
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக் குழு எடுத்துள்ள புதிய முடிவால், கேப்டன் கூல் டோணிக்கு மற்றவர்களைவிட குறைந்த சம்பளமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகத்தை கவனித்து வரும் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக் குழுவுடன், கடந்த நவம்பர் மாதம் கோச் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோஹ்லி, டோணி ஆகியோர் பேசினர்.

தற்போது வீரர்கள், ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. அதை ஏ+, ஏ, பி, சி என்று நான்காக பிரிக்க நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
மூன்று விதமாக கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுபவர்கள், ஏ+ பிரிவில் வருவா்கள். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், டோணி இந்தப் பிரிவில் வரமாட்டார். அதனால், அவருக்கு குறைந்த சம்பளமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வீரர்கள் சுழற்சி முறையில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்றோர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது.
அதேபோல் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்களான முரளி விஜய், சத்தேஸ்வர் புஜாரா ஆகியோரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
வீரர்கள் தரவரிசைப்படுத்துவது அணி தேர்வாளர்கள் கையில் இருப்பதால், டோணிக்கு பாதிப்பு வராது என்றும் கூறப்படுகிறது.
Story first published: Thursday, January 4, 2018, 17:04 [IST]
Other articles published on Jan 4, 2018


Click it and Unblock the Notifications