Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற வழியில்லை.. தோனியை கழட்டி விட காரணம் கண்டுபிடித்த பிசிசிஐ!

Recommended Video

IND WI SERIES 2019 | மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு

மும்பை : தோனிக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிச்சயமாக இடம் இல்லை என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததை அடுத்து தோனி தொடர்ந்து இந்திய அணியில் ஆடுவாரா? என்ற விவாதம் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.

தற்காலிக முடிவு

தற்காலிக முடிவு

தோனி அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளார்? இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் ஆடுவார் என தெரியாத நிலையில், தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐ வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு மட்டும் இந்த தற்காலிக முடிவை எடுத்துள்ளது என கூறப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்தியா அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளது, மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. இதற்கான அணித் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

தோனியால் குழப்பம்

தோனியால் குழப்பம்

ஆனால், இந்திய தேர்வுக் குழு தோனியால் குழப்பத்தில் இருக்கிறது. தோனி ஓய்வு பெறப் போகிறாரா? அவர் அடுத்து 2020 டி20 உலகக்கோப்பை வரை கிரிக்கெட் ஆட திட்டமிட்டுள்ளாரா? என தெரியாமல் தவித்து வருகிறது.

இனி ரிஷப் பந்த் தான்

இனி ரிஷப் பந்த் தான்

இப்போதைக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தோனி இல்லை. ரிஷப் பந்த் தான் என்ற முடிவு மட்டும் உறுதியாக எடுக்கப்பட்டுள்ளது. தோனி ஓய்வு பெறாத நிலையில் அவருக்கு எப்படி அணியில் வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பத்திற்கு தற்காலிக தீர்வை எட்டி உள்ளது பிசிசிஐ.

தீர்வு இதுதான்

தீர்வு இதுதான்

தோனிக்கு 2019 ஐபிஎல் தொடரில் முதுகு வலியும், அதன் பின் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விரலில் காயமும் ஏற்பட்டு இருந்தது. அதை காரணம் காட்டி, தோனிக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

தோனி நண்பர் மறுப்பு

தோனி நண்பர் மறுப்பு

தோனியிடம் நிச்சயமாக ஓய்வு பெறும் திட்டம் ஏதுமில்லை என தோனியின் நெருங்கிய நண்பரான அருண் பாண்டே தெரிவித்துள்ளார். சச்சினுக்கு பின் தோனியின் ஓய்வு முடிவு குறித்து தான் இந்திய கிரிக்கெட்டில் அதிக விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.

Story first published: Saturday, July 20, 2019, 15:12 [IST]
Other articles published on Jul 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+