'தல' இல்லாம சிஎஸ்கே இல்லை... என். ஸ்ரீனிவாசன் அதிரடி
Recommended Video
சென்னை : 2021லும் சிஎஸ்கேவிற்காக தல தோனி விளையாடுவார் என்று அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ராஜினாமா செய்வார் என்று பல்வேறு யூகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி இல்லை என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளது தோனி ரசிகர்களின் காதில் தேனை பாய்ச்சியுள்ளது.

2 உலககோப்பையில் தலைமை
முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கடந்த 2007 டி20 மற்றும் 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை தலைமையேற்று நடத்தியவர் என்ற பெருமையை கொண்டவர்.

6 மாதங்களாக போட்டிகளில் விலகல்
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து தோனி சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

விளக்கம் அளிக்காத தோனி
இந்நிலையில் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவிக்க உள்ளதாகவும் அதனால்தான் அவர் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளதாகவும் பல்வேறு கணிப்புகள் வெளிவந்தவண்ணம் இருந்தது. ஆனால் இவை குறித்து எந்த விளக்கத்தையும் தோனி அளிக்கவில்லை.

ரசிகர்கள் அதிர்ச்சி
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்காதது இதற்கான காரணமாக கூறப்பட்டது.

சிஎஸ்கே உரிமையாளர் திட்டவட்டம்
இந்நிலையில் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டுமுதல் சிஎஸ்கேவின் ஒரு அங்கமாக உள்ள தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை என்று அதன் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து ஸ்ரீனிவாசன்
மேலும் அடுத்து ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்திலும் தோனி சிஎஸ்கே அணிக்காக தக்க வைக்கப்படுவார் என்றும் ஸ்ரீனிவாசன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்
சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ள அவரது ரசிகர்கள், ஸ்ரீனிவாசனின் இந்த பதிலால் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications