Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி எதற்காக பந்தை எடுத்து சென்றார் தெரியுமா?

Recommended Video

தோனி ஓய்வு விவகாரம்...முற்றுப்புள்ளி வைத்தார் ரவி சாஸ்திரி- வீடியோ

லண்டன்: 3வது ஒருநாள் போட்டி முடிவில் தோனி அம்பயரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றது ஏன் என்பது குறித்து சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இங்கிலாந்து அணிகளுகிடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

போட்டியின் முடிவில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, நடுவர்களிடம் இருந்து ஆட்டத்தில் பயன்படுத்திய பந்தை வாங்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் தோனி ஓய்வு பெற போவதாகவும் வதந்திகள் கிளம்பியது.

போட்டி நினைவாக

போட்டி நினைவாக

பொதுவாக அந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்கள் போட்டியின் நினைவாக நடுவர்களிடம் இருந்து பந்தை வாங்கி செல்வது வழக்கம். தோனி அவ்வாறு செய்தது அவரது ஓய்வுக்காகத்தான் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர தொடங்கினர்.

காரணம் வேறு

காரணம் வேறு

இந்நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. செய்தியாளர்களிடம் அவர் கூறியது இதுதான். தோனி பந்தை வாங்கியது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணிடம் காண்பிப்பதற்காக மட்டுமே ஒழிய ஓய்வு பெருவதற்கில்லை.

தன்மையை ஆராய

தன்மையை ஆராய

45 ஓவர்கள் வீசிய பின்பும் பந்தின் தன்மையை ஆய்வு செய்து கள நிலவரங்களை அறிந்து கொள்ள அவ்வாறு செய்ததாகவும் கூறினார். தோனி ஓய்வு பெறுவதாக கூறுவது முட்டாள் தனமானது என்றும் அவர் எங்கும் செல்லவில்லை எனவும் கூறினார் ரவி சாஸ்திரி.

பொறுமையான ஆட்டம்

பொறுமையான ஆட்டம்

லார்ட்ஸில் நடந்த போட்டியில் தோனி மிகவும் பொறுமையாக ஆடி 59 பந்துகளில் 37 ரன்களை மட்டுமே குவித்தார். அந்த போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரே தோனி ஓய்வு பெறவேண்டும் என்று சமூக வலைதளங்களில் அவரது எதிர்ப்பாளர்கள் கூக்குரலிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 19, 2018, 12:52 [IST]
Other articles published on Jul 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+