For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இயல்பான ஆட்டத்தை ஆடுகிறார்.. உலகக்கோப்பையில் முக்கிய வீரர் தோனி தான்!

Recommended Video

இயல்பான ஆட்டத்தை ஆடுகிறார் தோனி : பிரசாத் மகிழ்ச்சி- வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், தோனி தன் பார்முக்கு திரும்பி உள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்று கருத்துக்கள் கூறியுள்ளார்.

கோலிக்கு நுட்பமான யோசனைகள் கூறுவதால், தோனி உலகக்கோப்பையில் மிகவும் முக்கிய வீரராக இருப்பார் என கூறினார் பிரசாத்.

அதிரடி காட்டி தெறிக்க விட்டார்

அதிரடி காட்டி தெறிக்க விட்டார்

தோனி கடந்த ஆண்டு சரியாக ஆடாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் அதிரடி காட்டி தெறிக்க விட்டார். இதற்கு முன்பு தோனியின் நிலை, அடுத்து உலகக்கோப்பையில் அவரிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறித்து பேசினார் பிரசாத்.

இயல்பான ஆட்டம்

இயல்பான ஆட்டம்

எம்எஸ்கே பிரசாத் கூறியதன் சாராம்சம் இது தான். தோனி கடந்த சில தொடர்களில் அற்புதமாக ஆடியதன் மூலம் சொல்ல வரும் செய்தி இது தான். அவர் தன் இயல்பான ஆட்டத்தை ஆட முடிவு செய்து விட்டார். இந்த தோனியை தான் நமக்கு தெரியும். இது போல ஆடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

குறைந்த போட்டிகளே காரணம்

குறைந்த போட்டிகளே காரணம்

குறிப்பிட சமயத்தில் குறைந்த போட்டிகளே ஆடியதால், தோனியால் அதிக ரன் குவிக்க முடியவில்லை. தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார். தன் இயல்பான ஆட்டத்தையும் மீண்டும் பெற்றுள்ளார்.

இரண்டு விஷயங்கள்

இரண்டு விஷயங்கள்

தோனியிடம் இரண்டு விஷயங்களை நாங்கள் பார்க்கிறோம். ஒன்று விக்கெட் கீப்பர். மற்றொன்று பேட்டிங். அவர் விக்கெட் கீப்பிங் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரது பேட்டிங் பார்ம் குறித்து சிறு கவலை இருந்தது. அவர் அதிக போட்டிகள் ஆடினால் அது சரியாகும் என்று நினைத்தோம். அதே போல நடந்துள்ளது.

உலகக்கோப்பையில் முக்கிய வீரர்

உலகக்கோப்பையில் முக்கிய வீரர்

விராட் கோலிக்கு ஆலோசனை சொல்வது, விக்கெட் கீப்பிங் திறனை வெளிக்காட்டுவது, களத்தில் இளம் வீரர்களை வழி நடத்துவது என பல வகைகளிலும் தோனி உலகக்கோப்பையில் முக்கிய வீரராக திகழ்வார் என்றார் பிரசாத்.

ஐபிஎல் தொடரில் தோனி

ஐபிஎல் தொடரில் தோனி

உலகக்கோப்பைக்கு முன்பு தோனி ஐபிஎல் தொடரில் ஆட உள்ளதும் அவரது பேட்டிங் திறனை மேம்படுத்த உதவும் என்றும் கூறினார் பிரசாத். ஐபிஎல் தொடரில் சுமார் 14-16 பரபரப்பான போட்டிகளில் ஆடுவது தோனியின் பார்மை இன்னும் அதிகரிக்கும் என கூறினார் பிரசாத்.

Story first published: Tuesday, February 12, 2019, 18:24 [IST]
Other articles published on Feb 12, 2019
English summary
Dhoni will play important role in World Cup 2019.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+