Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க தொடரில் ஆடுவாரா? தோனி எடுத்த அந்த அதிரடி முடிவு.. வெளியான ரகசியம்!

மும்பை : இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதில் டி20 தொடருக்கான அணியில் தோனி இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனியை அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள் என செய்தி வரும் நிலையில், அதை தாண்டி தோனியே ஒரு முடிவு எடுத்து இருக்கிறார் என்று கூறி அதிர்ச்சி அளிக்கிறது ஒரு தகவல்.

தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதலில் நடைபெற உள்ள டி20 தொடர் வரும் செப்டம்பர் 15 முதல் துவங்க உள்ளது.

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்

அதற்கான இந்திய டி20 அணியை அடுத்த வாரத்தில் தேர்வு செய்ய உள்ளது தேர்வுக் குழு. 2020 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து வீரர்களை தேர்வு செய்ய உள்ளது தேர்வுக் குழு.

ஓய்வில் தோனி

ஓய்வில் தோனி

மூத்த வீரர் தோனிக்கு அணியில் இடம் இல்லை என்ற நிலை தான் உள்ளது. அவர் 2020 டி20 உலகக்கோப்பையில் ஆடுவாரா? என்பது தெரியாத நிலை தான் உள்ளது. தற்காலிகமாக இரண்டு மாத காலம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் தோனி.

தேர்வுக் குழு குழப்பம்

தேர்வுக் குழு குழப்பம்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தானே விலகினார் தோனி. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடரில் அவரை எடுக்க முடியாது என்றாலும், அந்த விஷயத்தை எப்படி அணுகுவது? என தேர்வுக் குழு குழப்பத்தில் இருக்கிறது என தகவல்கள் வெளியானது.

அணியில் வாய்ப்பு இல்லை

அணியில் வாய்ப்பு இல்லை

அதே சமயம், இந்திய டி20 அணியில் மூன்று விக்கெட் கீப்பர்களை எடுக்கப் போவதாகவும், அதனால் தோனி அணியில் இடம் பெற வாய்ப்பே இல்லை எனவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தான் தோனியின் பெயர் கூற விரும்பாத நண்பர் ஒரு விஷயத்தை கூறி அதிர விட்டுள்ளார்.

ஒதுங்கி விடுவார்

ஒதுங்கி விடுவார்

தோனி அவராகவே ஒதுங்கி விடுவார் என கூறி இருக்கிறார். ஏற்கனவே, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் செய்தது போல, இப்போதும் பிசிசிஐ-யிடம் முன்பே தான் விலகுவதாக கூறி விடுவார். அதனால், தேர்வுக் குழு எந்த சிரமமும் இல்லாமல் அணித் தேர்வு செய்யலாம் என்ற நிலை ஏற்படும்.

புரியாத மர்மம்

புரியாத மர்மம்

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்காமல், ஒவ்வொரு தொடராக விலகி வருவது ஏன்? என்பது புரியாத மர்மமாக உள்ளது. தோனி ஐபிஎல் தொடரில் ஆடுவது மட்டுமே இப்போதைக்கு ஓரளவு நம்பகமான செய்தியாக உள்ளது.

ரிஷப் பண்ட் முன்னிலை

ரிஷப் பண்ட் முன்னிலை

தோனி இல்லாத நிலையில் இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் விக்கெட் கீப்பராக முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். அவரது பார்மும் கவலை அளிக்கும் வகையில் தான் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாத அவர், டி20 போட்டியில் ஒரே ஒரு அரைசதம் அடித்து இருந்தார். அதனால், அவர் தொடர்ந்து வாய்ப்பு பெறுவார்.

ஐபிஎல் வரை தொடரும்

ஐபிஎல் வரை தொடரும்

மறுபுறம், தோனி விலகி இருக்கும் மர்மம் அடுத்த ஐபிஎல்-இல் விலகும் என நாம் எதிர்பார்க்கலாம். காரணம், ஐபிஎல் வரை தோனி ஓய்வை அறிவிக்காமல் இருந்து, ஐபிஎல் முடிவில் ஓய்வை அறிவிக்கலாம் எனவும் ஒரு கருத்து இருக்கிறது.

Story first published: Thursday, August 29, 2019, 11:51 [IST]
Other articles published on Aug 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+