Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராணுவத்தில் இருந்து ரிட்டர்ன் ஆன தல தோனி செஞ்ச முதல் காரியம்..! லீக்கான அந்த போட்டோ!

Recommended Video

Ziva Dhoni pic goes viral | மகளுடன் தோனி இருக்கும் புகைப்படம் வைரலானது

ராஞ்சி: ராணுவ பயிற்சிக்கு பின் மீண்டும் தனது மகளை மீண்டும் தோனி சந்தித்த போட்டோ வைரலாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். உலக கோப்பையில் அவரது செயல்பாடு மந்தமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

அவர் ஓய்வு பெற வேண்டிய தருணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பலரும் அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அதை அனைத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, 2 மாதம் ராணுவ பயிற்சியில் சேருவதாக அறிவித்தார்.

அதன்படி, ராணுவ பயிற்சியினை விக்டர் படையுடன் சேர்ந்து மேற்கொண்டார். சுதந்திர தினம் அன்று லே பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அதனை முடித்து அவர் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயிற்சி பள்ளி என அனைத்து இடங்களுக்கும் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

சொந்த ஊர்

சொந்த ஊர்

அதன் பின்னர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தோனி லே விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊரான ராஞ்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். அவரது வருகை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புகைப்படம்

அதே நேரத்தில் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் கொண்டாடினர். தற்போது தோனி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனிக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தோனியின் மகள் ஸிவா தோனிக்கும் இருக்கிறது.

லீக்கான போட்டோ

லீக்கான போட்டோ

தோனி எங்கு இருந்தாலும் அங்கு சென்றுவிடுவார் அவரது மகள் ஸிவா தோனி. ஆனால் ராணுவ பயிற்சிக்கு சென்றதால் மகளை அழைத்து செல்ல முடிய வில்லை. தற்போது பயிற்சியை முடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை அவர் சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் வெளியில் கசிந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆளாளுக்கு பகிர்ந்து வருகின்றனர். எனவே, புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ராணுவ பயிற்சியை முடித்துவிட்ட தோனி இனி அடுத்த என்ன செய்யப் போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அடுத்து வரக்கூடிய தென் ஆப்ரிக்கா தொடரில் அவர் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Tuesday, August 20, 2019, 10:35 [IST]
Other articles published on Aug 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+