Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை மீண்டும் எடுக்க மாட்டோம்.. ரசிகர்களை அதிர வைக்கும் பிசிசிஐயின் முடிவு.. தோனிக்கு நெருக்கடி!

Recommended Video

Dhoni Retirement : ஓய்வு முடிவை அறிவிக்க தோனிக்கு பிசிசிஐ நெருக்கடி?- வீடியோ

டெல்லி: இந்திய அணியில் மீண்டும் தோனி தேர்வு செய்யப்பட வாய்ப்பு குறைவு என்று பிசிசிஐ தரப்பை சேர்ந்த சில நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை தொடர் தோல்வியை அடுத்து இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. கேப்டன் பதவி தொடங்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரை நிறைய விஷயங்கள் அணிக்குள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தோனியும் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

அவர் அளித்துள்ள பேட்டியில், தோனி இன்னும் ஓய்வு பெறாதது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் இந்த உலகக் கோப்பையில் சரியாக விளையாடவில்லை. அவரின் புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலே உங்களுக்கு தெரியும். தோனியின் ஆட்டத்தில் பழைய வேகம் எதுவும் இல்லை.

அணிக்கு

அணிக்கு

அவர் அணியில் இருப்பது அணிக்குத்தான் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அவரை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதேபோல் அவரும் அணிக்குள் பிரச்சனை செய்ய கூடாது. அவர் முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் இப்போதே சரியான முடிவை அறிவிக்க வேண்டும்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

தோனி பல விஷயங்களை கிரிக்கெட் உலகில் நிரூபித்துவிட்டார். தோனி இனியும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர் செய்ய வேண்டியதை செய்துவிட்டார். அவர் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியது கிடையாது. அவர் இப்போதே ஓய்வை அறிவிப்பது நல்லது.

இல்லை

இல்லை

அவரை எப்படியும் இனி அணியில் எடுக்க மாட்டார்கள். ஆம் அவரை அணியில் தேர்வு செய்வது இனி கடினம். அதனால் அவரே தனக்கான கடைசி தொடரை அறிவிப்பது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன், என்று கூறியுள்ளார் அந்த பிசிசிஐ நிர்வாகி.

Story first published: Tuesday, July 16, 2019, 14:58 [IST]
Other articles published on Jul 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+