Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு ஒரேடியாக ஆப்பு வைக்கும் “மூவர் திட்டம்”.. இதை மீறி தோனியால் அணிக்குள் நுழையவே முடியாது!

Recommended Video

Sourav Ganguly warns Indian team about Dhoni retirement

மும்பை: இந்திய அணியில் தோனிக்கு இனி இடமே கிடையாது என்ற நிலையை உருவாக்கப் போகும் பலே திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

2020 டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியை தயார் செய்து வரும் நிலையில், அந்த அணியில் இளம் வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது.

குறிப்பாக, விக்கெட் கீப்பர்கள் குறித்த பிசிசிஐ-யின் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தோனி இந்திய அணிக்குள் நுழையவே முடியாது என கூறப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை திட்டம்

டி20 உலகக்கோப்பை திட்டம்

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறிய நிலையில், 2020 டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. விராட் கோலி, ரவி சாஸ்திரி அதற்கான முழு வீச்சு திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா தொடர்

தென்னாப்பிரிக்கா தொடர்

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடி வரும் இந்தியா, அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது. அப்போது நடைபெற உள்ள டி20 தொடருக்கான அணியில் தோனி இடம் பெற மாட்டார். அவரை தேர்வுக் குழு விவாதப் பொருளாக கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.

மூன்று விக்கெட் கீப்பர்கள்

மூன்று விக்கெட் கீப்பர்கள்

காரணம், டி20 தொடருக்கு அதிரடியாக ஆடக் கூடிய மூன்று விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களை தேர்வு செய்ய உள்ளனர். அந்த மூன்று வீரர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன்.

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் தான் இதில் முதல் இடத்தில் இருக்கிறார். ஏற்கனவே, டி20, ஒருநாள், டெஸ்ட் அணியில் ஆடி வரும் அவர் சரியாக ஆடாத பட்சத்தில் மற்ற இருவரில் ஒருவர் அணியின் முன்னணி கீப்பராக வாய்ப்பு பெறுவார்கள்.

சஞ்சு சாம்சன் உள்ளூர் தொடர்

சஞ்சு சாம்சன் உள்ளூர் தொடர்

சஞ்சு சாம்சன் டி20 பேட்ஸ்மேனாக பல முறை தன்னை ஐபிஎல் தொடரில் நிரூபித்துள்ளார். ஆனால், விக்கெட் கீப்பராக அவர் மேலும் வளர வேண்டும் என எண்ணுகிறது தேர்வுக் குழு. அவர் அடுத்து இந்தியா ஏ தொடரில் ஆட உள்ளார். அப்போது கண்காணிப்பில் இருப்பார்.

இஷான் கிஷன் வாய்ப்பு

இஷான் கிஷன் வாய்ப்பு

இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் பிரபலமான வீரர். இந்தியா ஏ தொடர்களில் தொடர்ந்து ஆடி வருகிறார். அவரை நீண்ட நாட்களாக அணியில் எடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறது. அவருக்கு ரிஷப் பண்ட்டுக்கு அடுத்த இடத்தில் இவர் தான் இருக்கிறார்.

இந்திய அணியில் யார்?

இந்திய அணியில் யார்?

இப்போதைக்கு டி20 அணியில் ரிஷப் பண்ட் தான் முக்கிய வீரர். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் கடைசிப் போட்டியில் அரைசதம் அடித்து இருப்பதால் தென்னாப்பிரிக்கா தொடரிலும் அவர் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

ஒரே நேரத்தில் மூவர்

ஒரே நேரத்தில் மூவர்

அதே சமயம், ரிஷப் பண்ட் ஒருபுறம் ஆடினாலும், பேட்ஸ்மேனாக அவர்கள் இருவரும் வாய்ப்பு பெறலாம். உலகக்கோப்பையில் ஒரே நேரத்தில் தோனி, தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்ட் இருந்தது போன்றே டி20 உலகக்கோப்பை தொடரிலும் நடக்கலாம்.

தோனி வருவது கடினம்

தோனி வருவது கடினம்

ஒரே நேரத்தில் மூன்று விக்கெட் கீப்பர்களை களமிறக்கும் இந்த திட்டத்தால், தோனி பற்றி யாரும் யோசிக்கவே மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தோனி டி20 உலகக்கோப்பையில் ஆட விரும்புகிறார் என சில கிசுகிசுக்கள் வலம் வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட உள்ளது இந்த திட்டம்.

Story first published: Wednesday, August 28, 2019, 17:50 [IST]
Other articles published on Aug 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+