Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னது டென்னிஸ் தொடரில் தோனி கோப்பை வென்றாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.. குவியும் வாழ்த்து

ராஞ்சி : இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் நடைபெற்ற உள்ளூர் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

தோனி டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்றது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. கிரிக்கெட்டில் பல சாதனைகள் செய்த தோனி, தற்போது டென்னிஸ் போட்டியையும் விட்டு வைக்கவில்லை.

இரட்டையர் டென்னிஸ் ஆடிய தோனி

தோனியின் மாநிலமான ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் கன்ட்ரி கிரிக்கெட் கிளப் நடத்திய டென்னிஸ் தொடரில் தோனி கலந்து கொண்டார். அதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் மற்றொரு உள்ளூர் டென்னிஸ் வீரருடன் ஜோடியாக பங்கேற்ற தோனி இறுதிப் போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளார்.

இரட்டையர் டென்னிஸ் ஆடிய தோனி

இரட்டையர் டென்னிஸ் ஆடிய தோனி

தோனியின் மாநிலமான ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் கன்ட்ரி கிரிக்கெட் கிளப் நடத்திய டென்னிஸ் தொடரில் தோனி கலந்து கொண்டார். அதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் மற்றொரு உள்ளூர் டென்னிஸ் வீரருடன் ஜோடியாக பங்கேற்ற தோனி இறுதிப் போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளார்.

ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்

இது பெரிய சர்வதேச டென்னிஸ் தொடரோ, தேசிய அளவிலான டென்னிஸ் தொடரோ இல்லாவிட்டாலும், தோனி மற்ற உள்ளூர் டென்னிஸ் வீரர்களுக்கு ஈடு கொடுத்து ஆடி வெற்றி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

டென்னிஸிலும் சாதித்த தோனி

டென்னிஸிலும் சாதித்த தோனி

கிரிக்கெட்டில் தோனி இதுவரை 2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை ஆகியவற்றை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்துள்ளார். டெஸ்ட் அரங்கிலும் இந்திய அணியை முதல் ரேங்கில் இடம் பெறச் செய்துள்ளார். இப்படி கிரிக்கெட்டில் உச்சம் தொட்டு கோப்பைகள் வென்ற தோனி டென்னிஸ் தொடரிலும் கோப்பை வென்றுள்ளார்.

ஓய்வில் தோனி

ஓய்வில் தோனி

தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். டி20 அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இனி இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. ஒருநாள் அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ள தோனி, தன் ஓய்வு நேரத்தை பல்வேறு வழிகளில் செலவிட்டு வருகிறார். அப்படித் தான் இந்த டென்னிஸ் தொடரிலும் பங்கேற்றார். அதில் கோப்பையும் வென்று அசத்தியுள்ளார் தோனி.

Story first published: Saturday, December 1, 2018, 15:26 [IST]
Other articles published on Dec 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+