பந்தை மட்டும் வீசுறாங்க, ஆனா விக்கெட் வர மாட்டேங்குதே.. டோணி கவலை
ராஞ்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி கடும் கவலையில் உள்ளார். அவரது அணியின் பந்து வீச்சாளர்கள் கடந்த சில போட்டிகளாக விக்கெட்களை வீழ்த்துவதில் தடுமாறுவதுதான் அவரது கவலைக்குக் காரணம்.
அடுத்தடுத்து 3 தோல்விகளைச் சந்தித்து தடுமாற்றத்தில் உள்ளது சென்னை. பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெற்று விட்ட போதிலும் தொடர் தோல்விகள் அணிக்கு நல்லதல்ல என்று கேப்டன் டோணி கருதுகிறார்.
புதிய பந்துகளை வீச வரும் போது பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்தத் தவறி வருவதும் அவருக்கு கவலை அளிப்பதாக உள்ளது. நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியிடம் போய்த் தோற்று விட்டது சென்னை. இதன் காரணமாக டேவிட் ஹஸ்ஸியும், டோணியும் இணைந்து கடைசி நேரத்தில் காட்டிய வான வேடிக்கை அத்தனையும் வீணாகப் போய் விட்டது.

230 எடுத்தால்தான் ஆச்சு
இதுகுறித்து டோணி கூறுகையில், போகிற போக்கைப் பார்த்தால் ஒவ்வொரு போட்டியிலும் 230 ரன் எடுத்தாக வேண்டும் போல. காரணம், எங்களது பந்து வீச்சாளர்கள் சரிவர விக்கெட் வீ்ழ்த்தத் தவறி வருகின்றனர்.

குறைகளைச் சரி செய்ய வேண்டும்
எங்களது தோல்வியிலிருந்து நாங்கள் உடனடியாக பாடம் கற்க வேண்டியது அவசியம். குறைகளைக் களைய முயற்சிக்க வேண்டும். சில போட்டிகளை நாங்கள் மிக ஈஸியாக இழந்துள்ளோம்.

185 எடுத்தும் புண்ணியமில்லை
நாங்கள் 185 ரன்கள் எடுத்தபோது இதை வைத்து எதிரணியை வென்று விட முடியும் என்று நம்பினேன். ஆனால் பந்து வீச்சு எனது எண்ணம் தவறு என்பதை காட்டி விட்டது என்றார் டோணி.

வார்னர் வான வேடிக்கை
நேற்றைய போட்டியில் ஹைதராபாத்தின் வார்னர் வான வேடிக்கை காட்டி விட்டார். அதிரடியாக ஆடிய அவர் 83 ரன்களைக் குவித்தார். இதுதான் சென்னையின் தோல்விக்கு முக்கியக் காரணம்.

பிராக்டிஸ் போல
நேற்று சென்னை அணியின் பந்து வீச்சு ஏதோ பிராக்டிஸ் போலக் காணப்பட்டது வந்த பந்தையெல்லாம் வார்னர் அடித்து நொறுக்கினார். தேமே என்று இருந்தது சென்னையின் பந்து வீச்சு..


Click it and Unblock the Notifications