அங்கிள்…! தொப்பியை இப்படி போடுங்க…! பிராவோவுக்கு க்ளாஸ் எடுத்த தோனி மகள் ஸிவா.. வைரல் வீடியோ
Recommended Video

சென்னை: தோனியின் செல்ல மகள் ஸிவா, பிரோவோவுக்கு தொப்பி அணிவித்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
கிரிக்கெட்டில் தோனியை எந்தளவுக்கு அனைவருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ... அவரின் செல்ல மகள் ஸிவாவை அனைவருக்கும் பிடிக்கும். அவர் செய்யும் சேட்டைகள் அனைத்தும் டாப்கிளாஸ் ரகம்.

அண்மையில் நடைபெற்ற போட்டி ஒன்றுக்கு பிறகு.. சென்னை அணி வீரர்கள் மைதானத்தில ரிலாக்சாக இருந்தனர். அப்போது தோனி தமது செல்ல மகள் ஸிவாவுடன் அங்கு வந்தார்.
வழக்கம் போல... ஸிவாவும் அவரது அப்பா தோனியிடம் இருந்து தமது சேட்டையை ஆரம்பித்தார். பின்னர் மைதானத்தில் இருந்த மற்ற வீரர்களிடம் தமது விளையாட்டை தொடங்கினார்.
குறிப்பாக... பிராவோவிடம் அவர் பண்ணிய சேட்டைகள் அனைத்தும் ஸோ க்யூட். உயர மனிதன் பிராவோவிடம் அவர் சென்று லேசாக பேசுகிறார். அப்போது... அவருக்கு தொப்பியை எப்படி அணிவது என்று அழகாக சொல்லிக் கொடுக்கிறார் ஸிவா. அந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications