அப்பா தோனி ஆசையை அப்படியே நிறைவேற்றிய மகள் ஸிவா..! வலம் வரும் வைரல் வீடியோ… அது என்ன?
ராஞ்சி: அப்பாவை போல, ஸிவா தோனியும் ராணுவ உடை அணிந்து வலம் வருகிறார். ரசிகர்களிடையே அப்ளாசையும் அள்ளுகிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரரான தோனி தற்போது ராணுவ பயிற்சியை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். அவருடைய பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் தேதி லே பகுதியில் கொடியேற்றத்துடன் முடிவடைகிறது.
தாய் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக ராணுவத்துடன் தோனி தன்னை இணைத்து கொண்டார். இது எல்லோருக்குமே நன்றாக தெரியும். அவருடைய விருப்பம் ராணுவ உடை அணிவது, நாட்டுக்கு சேவை செய்வது போன்றதாகும்.

மகள் மீது பாசம்
தந்தை மீது அளவற்ற பாசம் கொண்டவர் மகள் ஸிவா. அதேபோல தான் தல தோனியும் தான். தந்தையை பல நேரங்களில் அப்படியே செய்பவர். இப்போது அதில் லேட்டஸ்ட் செய்தி வந்திருக்கிறது.
ராணுவ உடையில் தோனி
ராணுவத்தில் தற்போது இருக்கும் தோனி, ராணுவ உடையுடன் வலம் வருகிறார். அங்கே அவர் அப்படி என்றால்... இங்கே மகள் ஸிவாவும் அப்படித் தான். தந்தையை போலவே மிலிட்டரி டி சர்ட் அணிந்து அதில் ஏழாம் நம்பரை பதித்து உடை அணிந்து வருகிறார்.

இணையத்தில் வைரல்
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மகளின் இந்த ஆர்வத்துக்கு காரணம், அவரிடம் இருந்து வந்துள்ளது என்று தோனியின் மனைவி சாக்ஷி பல முறை கூறியுள்ளார்.

குவியும் பாராட்டு
தோனியை போன்றே அவரது மகள் ஜிவா தோனிக்கும் உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதனால், இந்த வீடியோவும் ஏகக்தக்கும் வைரலாகி இருக்கிறது. தோனி ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications