ஐடியாங்கிற பேர்ல தோனி சொல்றது அத்தனையுமே தப்பு…! போட்டு தாக்கும் இந்திய இளம் பவுலர்
மும்பை:ஆலோசனை என்ற பெயரில் தோனி சொல்றது அனைத்துமே தப்பு தான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விமர்சித்துள்ளார்.
ஐசிசி உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அனைத்து அணிகளும் அதற்கு தயாராகி வருகின்றன. இந்திய அணியின் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும் தோனி, களத்தில் கோலிக்கும், மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் அவ்வப்போது ஆலோசனை வழங்குவார்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சுழற்பந்து வீச்சாளர்களிடம் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்று ஐடியாக்களை அளிப்பார். அவர் சொன்னபடி பந்து வீசும் போது விக்கெட்டுகள் விழுந்துவிடும். அதை பெருமையாக நினைத்து, பல பந்து வீச்சாளர்கள் தோனியின் அறிவுரையால் விக்கெட் வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

குற்றம்சாட்டும் பவுலர்
இந் நிலையில் முதல் முறையாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதாவது... தோனி கூறும் ஆலோசனைகள் தவறாக முடிந்துவிடும். இது பற்றி அவரிடம் கேட்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

தப்பான ஆலோசனைகள்
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்கு அவர் கூறியதாவது: தோனி எனக்கு அளித்த டிப்ஸ் பெரும்பாலும் தப்பாகத் தான் முடிந்திருக்கிறது. அவர் சொல்வதுபோல் சில நேரங்களில் நடக்காமல் போய்விடும்.

கேட்கக்கூட முடியாது
ஆனால், அதன் பின்னர் இது குறித்து தோனியிடம் சென்று நீங்கள் சொன்னது போலவே பந்துவீசினேன்; எதுவும் நடக்கவில்லையே என்று கேட்கக்கூட முடியாது. தோனி யாருடனும் அதிகம் பேசமாட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே வந்து பேசுவார்.

அவராகவே பேசுவார்
அதிலும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து ஏதாவது சொல்வார். அந்த நேரத்தில் முக்கியமான டிப்ஸை பந்து வீச்சாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் தான் வந்து பேசுவார் என்றார்.

ரசிகர்கள் அதிருப்தி
உலக கோப்யையில் இருவரும் ஒன்றாக இந்திய அணியில் விளையாட உள்ள நிலையில், தோனி குறித்து குல்தீப் யாதவ் விமர்சித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணிக்காக ஐசிசி டி20 உலக கோப்பையை 2007-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையையும் தோனி தலைமையில்தான் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications