Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: துருவ் ஜூரல் கொண்டாட்டம்.. கையில் பச்சை குத்தியதன் அர்த்தம் என்ன?

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டியவுடன், அவர் தனது கையில் உள்ள 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற Tattoo காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்த பிறகு, ஜூரெல் தனது பைசெப்ஸ் பகுதியில் டாட்டூவாக வரைந்துள்ள இந்த வாசகத்தை கேமராக்களை நோக்கி பெருமிதத்துடன் காட்டினார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது ரசிகர்களிடையே பரவி வருகின்றன.

Dhruv Jurel

'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற இந்த முழக்கம் நாட்டின் எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்களையும், நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் போற்றும் வகையில் அமைந்ததாகும். மைதானத்தில் தனது சதத்தை இத்தகைய அர்த்தமுள்ள டாட்டூவை காட்டி அவர் கொண்டாடிய விதம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

துருவ் ஜூரல் தந்தை ராணுவத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 300 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நான் ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது சரண்ஸ் ஜெயின் நான்கு ரன்களுடனும் துருவ் ஜூரல் ஏழு ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சரண்ஸ் ஜெயின் 6 ரன்களில் பெவிலியன் திரும்ப ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரல் ஜோடி இணைந்து அபாரமாக விளையாடியது.

இதில் ரிஷப் பண்ட் 63 ரன்களில் வெளியேற துருவ் ஜூரல் தனி ஆளாக நின்று இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு மானவ் சுதர் மற்றும் சிராஜ் கொஞ்சம் பார்ட்னர்ஷிப் கொடுக்க துருவ் ஜூரல் அதிரடி காட்டினார். துருவ் ஜூரல் 97 பந்துகளில் அரை சதம் கடக்க சிறப்பாக விளையாடிய அவர் 171 பந்துகளில் தன்னுடைய இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது.

Story first published: Monday, August 24, 2026, 17:22 [IST]
Other articles published on Aug 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+