Dhruv Jurel: ஐபிஎல் வரலாற்றிலே சிறந்த விக்கெட் கீப்பிங்.. துருவ் ஜூரலுக்கு சச்சின், அஸ்வின் பாராட்டு
கொல்கத்தா: ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ஆர் வீரர் கேமரூன் கிரீனை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்தினார். கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இப்போட்டியில், அவரது இந்த அற்புதமான செயல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
156 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இரண்டாவது ஓவரிலேயே 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் கேமரூன் கிரீனும், அங்கிரிஷ் ரகுவன்ஷியும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 32 ரன்கள் சேர்த்து, அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த ஜோடி இலக்கை நோக்கி விளையாடிய நிலையில், துருவ் ஜூரலின் அபார ஸ்டம்பிங் கிரீனை வீழ்த்தியது. ரவி பிஷ்ணோய் வீசிய கூக்ளி பந்தைப் பாய்ந்து ஆட முயன்ற கிரீனை, பந்து லெக் திசையில் விலகிச்சென்றதால், ஜூரலுக்குப் பார்க்க முடியவில்லை.
இருப்பினும், ஜூரல் தன் இடதுபுறம் பாய்ந்து, பந்தை ஒரு கையால் பிடித்ததோடு, மின்னல் வேகத்தில் ஸ்டம்பை நோக்கி நேரடியாக எறிந்தார். பிட்ச்சில் வெகுதூரம் முன்னேறியிருந்த கிரீன் திரும்பிச் செல்ல முடியாததால், சிறப்பாக ஆடிய 27 ரன்களில் வெளியேறினார்.
இந்த மின்னல் வேக ஸ்டம்பிங்கைப் புகழ்ந்து, முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் “துருவ் ஜூ…. வெல். எப்பேர்ப்பட்ட ஸ்டம்பிங் என்று பாராட்டினார். ஒரு ரசிகர் இது “தோனிஷ் தருணம்” என அழைக்கப்பட்டதற்கு, அஸ்வின் “மன்னிக்கவும், இது தினேஷ் கார்த்திக் தருணம்” என்று பதிலளித்தார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜூரலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார். “ஒரே ஒரு ஸ்டம்ப் கண்ணுக்குத் தெரிகிறது, பாய்ந்து பிடித்தார், கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது! மிகவும் அபாரமானது, துருவ் ஜூரல்!” என்றார். இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், “இது கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஸ்டம்பிங்,” என ட்வீட் செய்து பாராட்டினார். எனினும் இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியே முதல் வெற்றியை பெற்று, புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது,


Click it and Unblock the Notifications