ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியதா? திடீரென்று அதிரடியாக ஆடும் ஆஸி.. வெற்றி பெறுமா இந்தியா
டெல்லி : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. டெல்லி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டதால் இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்க தடுமாறினர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்மித், லாப்ஸ்சென் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அந்த அணியின் உஸ்மான் கவாஜா மட்டும் பீட்டர் ஹான்ஸ்கோம்ப் மட்டுமே அரைசதம் கடக்க முதல் இன்னிங்சில் 263 ரன்கள் சேர்த்தனர்.
இந்த நிலையில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ராகுல், புஜாரா, ஸ்ரேயாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதிரடி ஆட்டம்
எனினும் ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் லயன் மற்றும் குஹான்மன் ஆகியோரின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.ஒரு கட்டத்தில் இந்திய அணி 139 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆஸ்திரேலிய அணி பெரிய இலக்குடன் முன்னிலை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்சர் பட்டேல் அபாரமாக விளையாடி 74 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு நல்ல துணையாக அஸ்வின் 37 ரன்கள் சேர்த்தார்.

ஆஸி பதிலடி
இதன் மூலம் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 1 ரன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடியது. உஸ்மான் கவாஜா 6 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயரின் அபார கேட்சால் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் டிராவஸ் ஹேட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் இருவரும் அதிரடியாக ஆடி வருகின்றனர்.

பிட்ச் மாறியதா?
40 பந்துகளில் 39 ரன்கள் சேர்க்க மார்னஸ் லாபஸ்சேன் 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் 12 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை இழந்து உள்ளது. இன்னும் கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியால் 250 ரன்கள் மேல் இந்தியாவுக்கு இலக்கை நிர்ணயிக்க முடியும்.இந்த நிலையில் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்து வந்த நிலையில் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் அதிக ரன்களை பேட்ஸ்மேன்கள் அடித்தனர்.

வரலாறு என்ன?
குறிப்பாக விராட் கோலி விளையாடும்போது பந்து தனது வேலையை காட்டிய நிலையில், அதே ஆடுகளத்தில் அக்சர்பட்டேல் சிக்ஸராக அடித்தார். இதன் மூலம் டெல்லி ஆடுகளம் இந்தியாவின் மற்ற ஆடுகளத்தை விட கொஞ்சம் வித்தியாசமாக செயல்படுகிறது தெரியவந்துள்ளது. பொதுவாக கடைசி நாட்களில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். ஆனால் டெல்லி ஆடுகளம் போகப்போக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு நடைபெற்ற 35 டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக விளையாடிய அணிகள் 11 முறை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு சாதகம்
மேலும் டெல்லி டெஸ்ட் வரலாற்றில் கடைசி இரண்டு நாட்களில் விக்கெட்டுகள் குறைந்த அளவிலே விழுந்திருக்கிறது. இதனால் பொறுப்புடன் விளையாடி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் நிச்சயமாக ரன் கிடைக்கும். மற்ற ஆடுகளங்களை போல் டெல்லி பிட்ச் பேட்டிங்கிற்கு ஆபத்தாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் தைரியமாக தங்களது திறமையை நம்பி விளையாடினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications