Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக், நியூசி. அரையிறுதியில் சர்ச்சை.. பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்பட்டதா ஐசிசி? இந்தியாவுக்கும் லக்

சிட்னி : டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஐசிசி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரையிறுதியில் பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 152 ரன்கள் மட்டும் தான் அடித்தது.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அரைசதம் விளாசினார்.இதன் மூலம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

சாதகமான ஆடுகளம்

சாதகமான ஆடுகளம்

இந்த நிலையில், சிட்னி ஆடுகளத்தை பாகிஸ்தானுக்கு சாதகமாக ஐசிசி தயாரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிட்னி மைதானத்தில் இருந்த புற்களை ஐசிசி முழுமையாக நீக்கிவிட்டதால், நியூசிலாந்து வீரர்கள் எதிர்பார்த்த அளவில் பந்து பவுன்சாகவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து போட்டியின் நடுவிலேயே கடந்த போட்டிக்கும், தற்போதுள்ள போட்டிக்கும் பந்து பவுன்ஸ் ஆன முறை குறித்து கிராபிக்ஸ் காட்சிகளுடன் ரசிகர்களுக்கு காட்டப்பட்டது.

புற்கள் அகற்றம்

புற்கள் அகற்றம்

இதற்கு புற்கள் அகற்றப்பட்டதே காரணம் என்று ஆடுகளம் குறித்து பேசிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஷேன் போலாக் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக தான் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினார். மேலும், ஆசிய கண்டத்தில் இருப்பது போல் மைதானத்தின் தன்மை மாற்றப்பட்டதாகவும், இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் சாதகமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ரிவர்ஸ் ஸ்விங்

ரிவர்ஸ் ஸ்விங்

இதே போன்று பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர்கள். ஆடுகளம் புற்கள் இல்லாமல் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் 15வது ஓவரிலேயே பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இதனை பயன்படுத்தி பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவுக்கும் லக்

இந்தியாவுக்கும் லக்

வெளிநாட்டு அணிகளை விட, ஆசிய அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தால் ஐசிசியின் வருமானம் அதிகரிக்கும் என்பதால், இப்ப ஐசிசி செயல்படுகிறதா என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதே போன்ற ஆடுகளம் தான் நாளை இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான ஆடுகளம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, November 9, 2022, 21:02 [IST]
Other articles published on Nov 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+