Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்றைய இந்தியா-நியூசி. போட்டியில் சூதாட்டமா... உண்மையிலேயே பிட்ச் மாற்றப்பட்டதோ?

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. பின் ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த இந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் நடக்க இருந்த சூதாட்டம் கடைசி நொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பிட்ச்சை வேகப்பத்துக்கு ஏற்ற மாதிரி மற்றும்படி இதில் பேரம் பேசப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவடைந்துள்ள நிலையில், புனே பிட்சில் உண்மையாகவே மாற்றங்கள் எதுவும் செய்யப்பட்டிருக்கிறதா என சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சனை பூதாகரம் ஆவதற்காக தயாராக இருக்கிறது.

 இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மிக முக்கியமான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. 231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது. இதன்முலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.

 போட்டியில் சூதாட்டம்

போட்டியில் சூதாட்டம்

இந்த நிலையில் இந்த போட்டியில் சூதாட்டம் நடக்க இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய 'ஸ்டிங் ஆபரேஷனில்' நிறைய தகவல்கள் வெளியாகியது. அதன்படி பத்திரிக்கையாளர்கள் சிலர் சூதாட்ட கும்பல் போல பேசி இன்று போட்டி நடக்க இருக்கும் பிட்சில் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கின்றனர். அதன்படி பிட்சை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு மற்றும்படி கூறியுள்ளனர். இதற்கு அந்த பிட்சின் பராமரிப்பாளர் உடனே ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதற்காக அவர் பேரம் வேறு பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிட்சின் உண்மையான தன்மை

பிட்சின் உண்மையான தன்மை

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்திய அணி இங்கிலாந்துடன் புனே எம்சிஏ மைதானத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடியது. சிறந்த பேட்டிங் பிட்ச்சான இதில் சாதாரணமாக 300 ரன்களை அடிக்க முடியும். அந்தப் போட்டியில் இந்திய 7 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்தது. 350, 304 என அந்தப் பிட்சில் அடிக்கப்பட்ட ஸ்கோர்கள் அனைத்துமே அதிகம் தான். இந்த பிட்சில் இயல்பாகவே பவுலர்கள் அதிகம் சொதப்புவது வழக்கம். இந்த பிட்ச் பேட்டிங் பிட்ச் என்பதால் பந்தும் அதிகமாக ஸீவிங் ஆகாது.

 மொத்தமாக மாறிய பிட்ச்

மொத்தமாக மாறிய பிட்ச்

இந்த நிலையில் புனே எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெறும் 230 ரங்களில் சுருண்டது. இதுதான் இந்த பிட்சில் அடிக்கப்பட்ட மிக குறைவான ஸ்கோர் ஆகும். அதே போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். எப்படி நியூசிலாந்து போன்ற ஒரு அணி இந்த பிட்சில் இவ்வளவு குறைவான ரன் எடுத்து என்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பேட்டிங் பிட்சான எம்சிஏ மைதானம் எப்படி பவுலிங் பிட்சாக மாறியது என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தப் பிரச்சனை இன்னும் சில நாளில் பூதாகரம் ஆவதற்காக தயாராக இருக்கிறது.

Story first published: Thursday, October 26, 2017, 18:40 [IST]
Other articles published on Oct 26, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+