Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த வீடியோவைப் பாருங்க.... தாடியை இன்சூர் செய்துள்ளாரா கோஹ்லி!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தனது தாடியை இன்சூர் செய்துள்ளாரா என்ரு ஒரு வீடியோவை வெளியிட்டு, கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் அடையாளம் அவருடைய தாடிதான். அவருக்காக இந்திய அணியில் இருந்த பெரும்பாலானோர் தாடியுடன் இருந்ததும் உண்டு.

Did virat kohli insured his beard

இந்த நிலையில், விராட் கோஹ்லி தொடர்பான ஒரு வீடியோவை, கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு தாடி மீது தனி பிரியம் உண்டு என்பது தெரியும். இந்த வீடியோவை பார்க்கும்போது, இன்சூர் செய்யும் அளவுக்கு தாடி மீது அவ்வளவு பிரியமா என்று ராகுல் கேட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இரண்டு அதிகாரிகள், கோஹ்லியின் தாடியை அளவு எடுக்கின்றனர். சில புகைப்படமும் எடுக்கின்றனர். அதன்பிறகு, சில ஆவணங்களில் அவரிடம் கையெழுத்து வாங்குகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்கும்போது, தாடியை கோஹ்லி இன்சூர் செய்கிறதுபோல் தான் உள்ளது. ஆனால், கோஹ்லி இதுவரை எதுவும் கூறவில்லை. அதே நேரத்தில் டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் கோஹ்லிக்கு சமீபத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டது. ரசிகர்கள் செல்பி எடுக்க போட்டிப் போட்டதில், அந்த சிலையின் காது பகுதி சேதமடைந்துள்ளது.

அதனால், மற்றொரு சிலையை அமைப்பதற்காக அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் அளவு எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பூனை எப்படியும் வெளியில் வந்துவிடும்.

Story first published: Friday, June 8, 2018, 19:41 [IST]
Other articles published on Jun 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+