Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாடிகார்டிற்கு ரூ.1.20 கோடி சம்பளம்” விராட் - அனுஷ்கா வாழ்வில் உள்ள 3வது நபர்..அப்படி என்ன செய்வார்

மும்பை: விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு பாதுகாவலராக (பாடிகார்டாக) இருக்கும் நபருக்கு கொடுக்கப்படும் சம்பளம் அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது.

இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. இவருக்கு கிரிக்கெட் மட்டுமின்றி விளம்பர ரீதியாக அதிக செல்வாக்கு உள்ளது.

இவரும் பாலிவுட் திரையுரலகின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

முன்னணி பிரபலங்கள்

முன்னணி பிரபலங்கள்

இந்தியாவின் மிக முக்கியம் பிரபலங்களான இவர்கள், மிகவும் சக்திவாய்ந்த தம்பதியினராகவும் வலம் வருகின்றனர். இவர்களின் தனிப்பட்ட வாழ்கை குறித்து சிறிய விஷயம் கூட வெளியுலகிற்கு வந்ததில்லை.மகள் வாமிகாவின் முகம் கூட இதுவரை வெளியுலக மக்கள் யாருக்கும் தெரியாது. இப்படி சமூக வலைதளங்களிலேயே இவ்வளவு கவனம் செலுத்தும் இந்த ஜோடி, தங்களின் பாதுகாப்பிலும் சூப்பர் பாதுகாப்பு ஏற்பாட்டை வைத்துள்ளனர். குறிப்பாக அவர்களின் பாதுகாவலர் ஊதியத்தை கேட்டால் அசந்து போவீர்கள்.

 பாதுகாவலரின் ஊதியம்

பாதுகாவலரின் ஊதியம்

அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி தம்பதி, தங்களின் பாடிகார்டாக பிரகாஷ் சிங் ஆக்கா சோனு என்ற நபரை வைத்துள்ளனர். அனுஷ்காவின் பல்வேறு புகைப்படங்களில் சோனுவை கண்டிருக்கலாம். அவருக்கு ஆண்டு வருமானமாக அனுஷ்கா கொடுக்கும் ஊதியம் ரூ. 1.2 கோடியாகும். தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு கூட இந்த ஊதியம் கொடுக்கப்படுவதில்லை.

யார் அவர்?

யார் அவர்?

இவ்வளவு அதிக தொகை பெறும் சோனு கடந்த 6 -7 ஆண்டுகளாக அனுஷ்காவுக்கு பாடிகார்டாக உள்ளார். திருமணத்திற்கு முன்னர் விராட் கோலிக்கும் இவர் அவ்வபோது பாதுகாவலராக சென்றிருப்பதால், அவர்களின் குடும்பத்தில் ஒருவரை போன்று சோனி மாறியுள்ளார்.

 குடும்பத்துடன் நெருக்கம்

குடும்பத்துடன் நெருக்கம்

அனுஷ்கா சர்மாவின் கர்ப்ப காலக்கட்டங்களில் அவருக்கு தேவையான மருத்துவ ஏற்பாடுகளை சோனு தான் அதிகளவில் நேரில் இருந்து செய்துக்கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இன்றும் வாமிகாவின் புகைப்படத்தை யாரும் எடுக்கவிடாமல் பார்த்துக்கொள்வது சோனு தான். இப்படி கோலியின் குடும்பத்தில் யாருக்கும் தெரியாத 3வது நபராக சோனு வலம் வருகிறார்.

Story first published: Sunday, December 12, 2021, 20:02 [IST]
Other articles published on Dec 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+