Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா பாகிஸ்தான் மேட்சை பார்க்கவில்லையா...கவலைய விடுங்க இன்னைக்கு ஹைலட்ஸ் பாருங்க!

சென்னை: மினி உலகக் கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான மேட்ச்சை பார்க்கத் தவறியவர்களுக்காக இன்று விளையாட்டு சேனல்களில் ஹைலட்டுகள் வரும் நேரத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்மான் இடையிலான லீக் அட்டம் பர்மிங்காமில் நேற்று நடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் முதலில் களமிறங்கயி இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. கேப்டர் விராட் கோலி 81 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்தியா 72 ரன்கள் குவித்து அசத்தியது.

 Did you missed India Pakistan match yesterday don't worry enjoy with highlights today

இதனையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தானுக்கு 48 ஓவர்களில் 324 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் இலக்கை நோக்கி கடுமையா போராடிய போது இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். பாகிஸ்தானால் ஆட முடியாத நிலை ஏற்பட்டதால் 33.4 ஓவர்களில் 164 ரன்களில் பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது.

ஒரே இன்னிங்சில் இந்தியாவின் டாப் 4 வீரக்ளான ரோகித் சர்மா, ஷிகர்தவான். விரட் கோலி,. யுவராஜ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இது போன்ற நிகழ்வு கிரிக்கெட்டில் 3வது முறையாக நிகழ்கிறது. ரோகித் ஷர்மாவும் ஷிகர் தவானும் செம பார்ட்டனர்ஷிப்பில் 136 ரன்களை குவித்தனர். சாம்பியன் கோப்பையில் இது போன்ற இவர்கள் 100 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 3வது முறையாகும்.

பரபரப்புக்கு பஞ்சமின்றி நடந்த இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சை பார்க்காமல் விட்டவர்கள் இன்று ஆன்லைன் மற்றும் டிவியில் நேற்றைய விறுவிறுப்பான மேட்சின் ஹைலைட்டுகளை பார்த்து என்ஜாய் பண்ணலாம். எந்தெந்த சேனலில் எத்தனை மணிக்கு என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஹாட்ஸ்டார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 - காலை 9.30 மணி, மதியம் 12.30, மாலை 4.30 மணி (IST)

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 - காலை 10 மணி, மதியம் 2 மணி, இரவு 7.30 மற்றும் நள்ளிரவு 11.30 மணி(IST)

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி1 - மதியம் 12.30 மணி, மாலை 4.30 மணி(IST)

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி2- மதியம் 2 மணி, இரவு 7.30 மணி, நள்ளிரவு 11.30 மணி(IST)

Story first published: Monday, June 5, 2017, 12:15 [IST]
Other articles published on Jun 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+