For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிறந்த பந்து வீச்சுகளைகூட சிதறடிப்பதில் சேவாக் ஒரு விவ் ரிச்சர்ட்ஸ்: டோணி நெகிழ்ச்சி

By Veera Kumar

டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் பேட்டிங்கை நேரில் பார்த்ததில்லை என்றபோதிலும், வீரேந்திர சேவாக்கின் அதிரடி, ரிச்சர்ட்ஸ்சை நினைவுபடுத்தியது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.டோணி புகழாரம் சூட்டியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து, சேவாக் ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், டோணி டிவிட்டரில் கூறியுள்ள கருத்துகள் இவைதான்: விவ் ரிச்சர்ட்ஸ் பேட் செய்தபோது நேரில் அதை பார்த்ததில்லை. ஆனால், சிறந்த பந்து வீச்சுகளையும், சேவாக் சிதற விட்டதை நேரில் பார்க்க முடிந்தது என்பதை பெருமையோடு நான் கூறிக்கொள்கிறேன்.

Didn't see Richards but witnessed Sehwag tear apart best bowling attacks: Dhoni

நேர்மறையான யோசனையுடன், ரன்களை சேகரிக்க வேண்டும் என்பது எப்போதுமே நாங்கள் சொல்லிக்கொள்வது. ஆனால், சேவாக்கோ, எப்போதுமே, சிங்கிள் ரன்களை சேகரிப்பதைவிட, பவுண்டரியில் ரன் குவிப்பதில் கவனம் வைத்திருந்தவர்.

பலரும் உங்களை போல பேட்டிங் செய்ய விரும்புவார்கள். அப்படி முயல்வோர் அவர்களின் பேட்டிங்கை என்ஜாய் செய்து ஆடினாலே போதும் என்பதுதான் எனது அறிவுரை. சேவாக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Story first published: Tuesday, October 20, 2015, 17:12 [IST]
Other articles published on Oct 20, 2015
English summary
As Sehwag announced his decision on Twitter, tributes started flowing. Fans were trending "#ThankYouSehwag" on Twitter. Dhoni too took to Twitter to hail Sehwag's achievements. "Didn't see Viv Richards bat in person but I can proudly say I have witnessed Virender Sehwag tearing apart the best bowling attacks," Dhoni wrote on his Twitter page.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+