For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2019: மதுரையை மண்ணை கவ்வ வைத்த திண்டுக்கல்..! பைனலுக்குள் அசத்தலாக நுழைந்து சாதனை

திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரின் குவாலிபயர் 2ல் மதுரை பாந்தர்சை தெறிக்கவிட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்திருக்கிறது.

டிஎன்பிஎல் லீக் டி 20 தொடரின் குவாலிபயர் 2 திண்டுக்கல்லில் நடைபெற்றது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பேட் செய்தது.

தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். வழக்கம்போல் இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஸ்கோர் 101 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. ஜெகதீசன் 48 பந்தில் 50 ரன்கள் குவித்து வெளியேறினார்.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

ஹரி நிஷாந்த் 46 பந்தில் 51 ரன்கள் சேர்த்தார். விவேக் ஒரு ரன்னில் ஏமாற்றம் தந்தார். ஆனால், முகமது மற்றும் சதுர்வேத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஸ்கோர் எக்குதப்பாக உயர்ந்தது. 18 மற்றும் 19வது ஓவர்களில் தலா 2 சிக்சர்கள் பறந்தன.

175 ரன்கள் குவிப்பு

175 ரன்கள் குவிப்பு

13 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் விளாசிய சதுர்வேத் 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் முகமது ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகள் என 16 ரன்கள் விளாச திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. முகமது 9 பந்தில் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஆரம்பம் ஏமாற்றம்

ஆரம்பம் ஏமாற்றம்

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சரத் ராஜூம், அருண் கார்த்திக்கும் வந்தனர். அதில், அருண் கார்த்திக் 11 ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்தார். கேப்டன் சந்திரன் எடுத்தது 3 ரன்கள்.

நம்பிக்கை தந்த ஜெகதீசன்

நம்பிக்கை தந்த ஜெகதீசன்

சுப்ரமணியன் 12 ரன்களில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் நின்று கொண்டிருந்த சரத் ராஜ், பார்ட்னஷிப் இன்றி தவித்தார். அவர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன் கவுசிக் ஓரளவு நம்பிக்கை தந்தார்.

திருப்புமுனை பவுலிங்

திருப்புமுனை பவுலிங்

ஆனால், அவரை 40 ரன்களில் சிலம்பரசன் வெளியேற்ற, ஆட்டத்தின் திருப்பு முனையாக அந்த ஓவர் அமைந்தது. அதற்கு அடுத்த பந்தில், மிதுன் டக் அவுட்டானார். ஆட்டம் கிட்டத்தட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வசம் வந்தது.

திணடுக்கல் வெற்றி

திணடுக்கல் வெற்றி

ஆனாலும், எப்படியாவது வெற்றி றெ வேண்டும் என்ற வேகத்தில் இறுதி வரை போராடியது மதுரை பாந்தர்ஸ். பதட்டத்தில் தொடர்ந்து ஆடியதால், விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. முடிவில் 19.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் மதுரைபாந்தர்சை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.

Story first published: Tuesday, August 13, 2019, 23:38 [IST]
Other articles published on Aug 13, 2019
English summary
Dindigul dragons defeated madurai panthers and enters in to TNPL final.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+