For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேப்பாக்கை கில்லியாடியது... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது... திண்டுக்கல் கலக்கல்!

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கை வென்றது திண்டுக்கல். இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ். இதன் மூலம் மதுரையைத் தொடர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு திண்டுக்கல் முன்னேறியது.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசனின் லீக் சுற்றுகள் முடிவடைய உள்ளன. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஏற்கனவே 6 போட்டிகளில் 5ல் வெற்றிபெற்று சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Dindigul dragons enters the play off of tnpl

இந்த நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்று திண்டுக்கல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேப்பாக் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் எடுத்ததது. ஆரிப் 36, கேப்டன் கோபிநாத் 25 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் அணியின் சிலம்பரசன் 3, திரிலோக்நாத், வருண் தோத்தாத்ரி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

புள்ளி பட்டியல்

அடுத்து விளையாடிய திண்டுக்கல் அணி 13.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து வென்றது. கேப்டன் என்.ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் குவித்தார். ஹரி நிஷாந்த் 34, விவேக் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்தனர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

காரைக்குடி 8 புள்ளிகளுடனும், கோவை, தூத்துக்குடி, திருச்சி அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு நுழையப் போகும் அடுத்த இரண்டு அணிகள் எவை என்பது இன்றும், நாளையும் நடக்கும் கடைசி லீக் ஆட்டங்கலில் தெரிய வரும். காஞ்சி மற்றும் சேப்பாக் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டன.

Story first published: Saturday, August 4, 2018, 11:29 [IST]
Other articles published on Aug 4, 2018
English summary
Dindigul dragons wins over chepauk super gillies and enters the play off.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+