For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2019: தூத்துக்குடியை அடித்து துவைத்த அஸ்வின் அண்ட் கோ… திண்டுக்கல் ஹாட்ரிக் வெற்றி..!!

நெல்லை: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Dindigul dragons won by 40 runs against tuti patrios

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹரி நிஷாந்த் 17 ரன்களும், ஜெகதீசன் 53 ரன்களும் அடித்து வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் அஸ்வின் 28 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 52 ரன்கள் விளாசினார். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

Dindigul dragons won by 40 runs against tuti patrios

தூத்துக்குடி அணி தரப்பில் தமிழ் குமரேசன், மூர்த்தி மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி அணியின் தொடக்க வீரர்கள் அக்ஷய் ஸ்ரீனிவாசன் 16 ரன்னிலும், செந்தில் நாதன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Dindigul dragons won by 40 runs against tuti patrios

பின்னர் வந்த வீரர்கள் திண்டுக்கல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஓரளவு நிலைத்து நின்று ஆடிய நாதன் அதிகபட்சமாக 38 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

Dindigul dragons won by 40 runs against tuti patrios

இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் தூத்துக்குடி பேட்ரியாட்சை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று, ஹாட்ரிக் வெற்றியை பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Story first published: Saturday, July 27, 2019, 20:58 [IST]
Other articles published on Jul 27, 2019
English summary
Dindigul dragons won by 40 runs against tuti patrios.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+