For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தூத்துக்குடியை வீழ்த்தியது.... திண்டுக்கல்லுக்கு 4வது வெற்றி... புள்ளிப் பட்டியலில் டாப்!

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி அணியை வென்றது திண்டுக்கல். நான்கு ஆட்டங்களில் வென்று திண்டுக்கல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வென்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியை அபாரமாக வென்றது.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.

Dindugul dragons beats jones tuti patriots in the tnpl

முதலில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. எஸ். தினேஷ் நல்ல துவக்கத்தை கொடுத்தாலும், கவுசிக் காந்தி 6, ஆகாஷ் சும்ரா 4, ஆனந்த் சுப்ரமணியம் 13, அக்ஷய் ஸ்ரீனிவாசன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

தினேஷ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஆர். சதீஷ், மாலோலன் ரங்கராஜன் ஜோடி சேர்ந்தனர். சதீஷ் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் சேர்த்தார். மாலோலன் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 37 ரன்கள் சேர்த்தார். தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் அணியின் அபினவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய திண்டுக்கல் அணிக்கு என்,. ஜெகதீசன் 31 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஹரி நிஷாந்த் 4, சதுர்வேத் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆர். விவேக் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாசினார். மொகம்மது 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

புள்ளி பட்டியல்

இந்த சீசனில் திண்டுக்கல் அணி தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வென்று, 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, July 25, 2018, 11:42 [IST]
Other articles published on Jul 25, 2018
English summary
Dindugul dragons tops the points table with fourth win.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+