டிஎன்பில் சீசன் 3ல் முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் ட்ராகன்ஸ்
திண்டுக்கல் : டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி சியச்செம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. இதில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் துவங்குவதாக இருந்தது.திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால், கடந்த இரண்டு நாட்களில் நடக்க வேண்டிய டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

நேற்று முதலாவது குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும்,சியச்செம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி அதிரடியாக ஆடி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். மற்றுமொரு அதிரடி வீரர் விவேக் 25 பந்துகளில் 54 ரன்களை குவித்தார். திண்டுக்கல் அணி சார்பில் மொத்தம் 14 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து ஆடிய மதுரை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. திண்டுக்கல் தரப்பில் முஹம்மத் 3 விக்கெட்களை எடுத்தார்.
இப்போட்டியில் தோல்வி அடைந்தாலும் மதுரை அணிக்கு இறுதி போட்டிக்கு செல்ல மற்றுமொரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி இன்று எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியை எதிர்கொள்ளும்.
Story first published: Friday, August 10, 2018, 15:43 [IST]
Other articles published on Aug 10, 2018


Click it and Unblock the Notifications